News July 8, 2025
வாடகை வீட்டில் வசிப்பவரா நீங்கள்?

வாடகை உயர்வு, திடீர் வெளியேற்றம், முன்பண பிரச்சனை என வாடகை வீட்டில் குடியிருப்போர் சந்திக்கும் பிரச்சனைகள் ஏராளம். வாடகை வீட்டில் குடியிருப்போர் உரிமைகளை பாதுகாக்க தனி சட்டமே உள்ளது. உங்க ஹவுஸ் ஓனர் அதிக கட்டணம் வசூலித்தாலோ அல்லது தொந்தரவு தந்தாலோ 1800 599 01234 / 9445000424 (வாடகை அதிகாரி) ல் புகார் செய்யலாம் அல்லது உங்க பகுதி வாடகை அதிகாரியிடம் புகார் செய்யலாம் . ஷேர் பண்ணுங்க. <<16990083>>தொடர்ச்சி<<>>
Similar News
News July 8, 2025
விழுப்புரம் புதுச்சேரி ரயில் சேவை ரத்து

விழுப்புரத்தில் இருந்து காலை 5:25 மணிக்கும், புதுச்சேரியில் இருந்து காலை 8:05 மணிக்கும் புறப்படும் விழுப்புரம்- புதுச்சேரி பாசஞ்சர் ரயில்கள் (எண் 66063 மற்றும் 66064) திருச்சி கோட்ட ரயில் பாதைகளில் பராமரிப்பு பணி காரணமாக வரும் ஜூலை 10ம் தேதி முதல் ஜூலை 15ம் தேதி வரையில் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே திருச்சி கோட்ட அலுவலகம் தெரிவித்துள்ளது.
News July 8, 2025
விழுப்புரம்-சென்னை கடற்கரை ரயில் பகுதியாக ரத்து

திருச்சி கோட்ட ரயில் பாதைகளில் பராமரிப்பு பணி காரணமாக, விழுப்புரத்தில் இருந்து பகல் 2:40 மணிக்கு சென்னை கடற்கரைக்கு புறப்படும் பாசஞ்சர் ரயில் (எண் 66046) வரும் ஜூலை 12 மற்றும் ஜூலை 15ம் தேதிகளில் முண்டியம்பாக்கத்தில் இருந்து பகல் 2:55 மணிக்கு புறப்பட்டு செல்லும் என தெற்கு ரயில்வே திருச்சி கோட்ட அலுவலகம் தெரிவித்துள்ளது.
News July 8, 2025
தாம்பரம்-விழுப்புரம் பயணிகள் ரயில் பகுதியாக ரத்து

தாம்பரத்தில் இருந்து காலை 9:45 மணிக்கு விழுப்புரத்திற்கு புறப்படும் தாம்பரம் ~விழுப்புரம் பாசஞ்சர் ரயில் (எண் 66045) வரும் ஜூலை12 மற்றும் ஜூலை15ம் தேதிகளில் திருச்சி கோட்ட ரயில் பாதைகளில் பராமரிப்பு பணி காரணமாக முண்டியம்பாக்கம் வரை மட்டுமே இயக்கப்படும் என தெற்கு ரயில்வே திருச்சி கோட்ட அலுவலகம் தெரிவித்துள்ளது.