News September 4, 2024
வாடகை பாக்கி – இந்து அறநிலைய துறை விளக்கம்

மதுரை எல்லீஸ் நகரில் உள்ள மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் இயங்கும் இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் அலுவலகத்திற்கு கடந்த ஏழு ஆண்டுகளாக 59 லட்சம் ரூபாய் வாடகை செலுத்தாததைக் குறித்து தகவல் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், வாடகை பாக்கியை செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மீனாட்சியம்மன் கோவில் இணை ஆணையர் செல்லத்துரை விளக்கம் அளித்துள்ளார்.
Similar News
News August 26, 2025
மதுரை: மகளிர் உரிமைத் தொகை புகாரளிக்கலாம்

மதுரை மக்களே, வறுமை கோட்டிற்கு கீழே இருக்கும் தகுதி வாய்ந்த மகளிர் தேர்வு செய்யப்பட்டு அரசு மூலம மாதம் தோறும் ரூ.1000 கொடுக்கப்படுகிறது. இந்நிலையில் தகுதி அல்லாதவர்கள் மகளிர் உரிமை தொகை பெற்றுக் கொண்டிருப்பது உங்களுக்கு தெரிந்தால் <
News August 26, 2025
மதுரை: கேஸ் சிலிண்டர் இருக்கா..இது கட்டாயம்

மதுரை மக்களே எதிர்பாராத நேரங்களில் வீட்டின் சமையல் கேஸ் சிலிண்டரில் எல்பிஜி (LPG) கசிவு ஏற்பட்டால், 1906 என்ற அவசர உதவி எண்ணுக்கு அழைக்கவும். இது இந்தியன் ஆயில், ஹெச்பிசி போன்ற அனைத்து எல்பிஜி நிறுவனங்களுக்கும் பொதுவான அவசர உதவி எண் ஆகும். இந்த எண் 24 மணி நேரமும் கிடைக்கும். மேலும், 1800 233 3555 என்ற எண்ணையும் தொடர்பு கொள்ளலாம். மறக்காம SHARE பண்ணுங்க.ஆபத்தில் இது கண்டிப்பாக உதவும்.
News August 26, 2025
ரூ.2.75 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவி

மதுரை மாவட்ட மக்கள் குறைதீர் கூட்டம் மாவட்ட ஆட்சியர் பிரவீன்குமார் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நரம்பியல் பாதிப்பு, ஆட்டிசம் போன்றவற்றால் நடக்க இயலாத மாணவர்கள் 61 பேருக்கு காலிப்பர்கள், விபத்தில் கால் பாதிக்கப்பட்ட 2 பேருக்கு செயற்கை கால்கள் என மொத்தம் ரூ.2.75 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது.