News December 16, 2025

வாசலை அலங்கரிக்கும் ஸ்பெஷல் மார்கழி கோலங்கள்!

image

பல்வேறு சிறப்புகள் கொண்ட மார்கழி மாதத்தில், வீட்டு வாசலில் பெண்கள் கோலம் போடுவது வழக்கம். அதிகாலையில் கோலமிட்டு இறை வழிபாடு செய்தால் நமது விருப்பங்கள் நிறைவேறுவதோடு, வாழ்க்கை முன்னேற்றத்திற்கு தடையாக உள்ள கர்ம வினைகள் அகலும் என நம்பப்படுகிறது. அப்படியாக, வீட்டு வாசலில் போடக்கூடிய சில எளிய கோலங்கள் இங்கு போட்டோக்களாக பகிரப்பட்டுள்ளன. அவற்றை SWIPE செய்து பார்த்து வீட்டிலும் முயற்சிக்கவும்..

Similar News

News December 16, 2025

18-ம் தேதி சுழன்று அடிக்க உள்ள ‘தளபதி புயல்’

image

‘ஜனநாயகன்’ படத்தின் 2-ஆவது பாடல் வரும் 18-ம் தேதி வெளியாக உள்ளது. நேற்று வரையிலான பேரமைதி, 18-ம் தேதி பெரும் புயலுக்கான முன்னோட்டம் என குறிப்பிட்டு, தயாரிப்பு நிறுவனம் இதை அறிவித்துள்ளது. ஈரோட்டில் விஜய்யின் மக்கள் சந்திப்பு நடைபெறும் அதே நாளில், இப்பாடல் வெளியாக உள்ளது. முன்னதாக, இப்படத்தின் முதல் பாடல் ‘தளபதி கச்சேரி’ சமீபத்தில் வெளியாகி, பட்டிதொட்டியெங்கும் ஹிட் அடித்தது.

News December 16, 2025

நேஷனல் ஹெரால்டு வழக்கு.. சோனியா, ராகுலுக்கு நிம்மதி

image

நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியா காந்தி, ராகுல் காந்திக்கு எதிரான ED-ன் குற்றப்பத்திரிக்கையை டெல்லி ரோஸ் அவென்யூ கோர்ட் நிராகரித்துள்ளது. ED குற்றம்சாட்டுவது போல் இந்த பணமோசடி வழக்கு எந்த விசாரணை அமைப்பின் FIR அடிப்படையிலும் நடத்தாமல், தனியார் (சுப்ரமணியன் சுவாமி) அளித்த புகாரின் அடிப்படையிலானது என கூறி
வழக்கை விசாரிக்க கோர்ட் மறுத்துள்ளது. இதை குறிப்பிட்டு நீதி வென்றதாக காங்., தெரிவித்துள்ளது.

News December 16, 2025

அழகான பெண்களை கொண்ட நாடுகள்

image

உலகின் அழகான பெண்கள் கொண்ட நாடுகளின் பட்டியலை World of Statistics வெளியிட்டுள்ளது. இதில் இந்தியா 12-வது இடத்தை பிடித்துள்ளது. மேலே, டாப் 10-ல் இடம்பிடித்த நாடுகளை, போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. உங்களுக்கு எந்த நாட்டு பெண்களை பிடிக்கும்? கமெண்ட்ல சொல்லுங்க. SHARE.

error: Content is protected !!