News April 29, 2024

வாக்கு பெட்டி மையத்தினை ஆய்வு செய்த ஆட்சியர்

image

இன்று காஞ்சிபரம், பொன்னேரிக்கரை, அண்ணா பொறியியல் கல்லூரியில் 2024 பாராளுமன்ற தொகுதி தேர்தல் வாக்குகள் பெற்ற வாக்கு பெட்டிகள் பாதுகாப்பு மையத்தினை மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்கள். உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கி.சண்முகம், காஞ்சிபுரம் வருவாய் கோட்டாட்சியர் மு.கலைவாணி ஆகியோர் உடனிருந்தனர்.

Similar News

News April 19, 2025

காஞ்சியில் நாளைய (ஏப்ரல் 20) மின்தடை விவரம்

image

ஸ்ரீபெரும்புதுார் துணைமின் நிலையம்: மப்பேடு, செங்காடு, உசேன் நகர், விஸ்வநாதகுப்பம், அமுஞ்சிவாக்கம், சமத்துவபுரம், இருங்காட்டுக்கோட்டை, நெமிலி, சிவன்தாங்கல், என்.ஜி.ஓ., காலனி, சுகம்தரும்பேடு, தண்டலம், மேவலுார்குப்பம், மண்ணுார், நயப்பாக்கம், பாப்பரம்பாக்கம் ரோடு, வளர்புரம், கிறிஸ்தவ கண்டிகை, செட்டிபேடு ஆகிய பகுதிகளில் நாளை காலை 9:00 மணி முதல், மாலை 5:00 மணி வரை மின்தடை ஏற்படும். ஷேர் பண்ணுங்க

News April 19, 2025

விஸ்வகர்மா திட்டம் சமூக நீதிக்கான திட்டம் அல்ல

image

குன்றத்தூரில் இன்று (ஏப்ரல் 19) கலைஞர் கைவினைத் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துப் பேசினார். அப்போது, “விஸ்வகர்மா திட்டம் சமூக நீதிக்கான திட்டம் அல்ல. குலத்தொழிலை ஊக்குவிக்கிறது. விஷ்வகர்மா திட்டம் படிப்பை விட்டு வெளியேற்றி குடும்ப தொழிலை செய்ய ஊக்குவிக்கிறது. படிப்பை விட்டு குலத்தொழிலுக்கு செல்லுமாறு மாணவர்களை வஞ்சிக்க மத்திய அரசு திட்டம் தீட்டுவதாக” கூறினார்.

News April 19, 2025

5 அறிக்கைகளை வெளியிட்டார் முதல்வர் 

image

குன்றத்தூரில் இன்று (ஏப்ரல் 19) கலைஞர் கைவினைத் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அப்போது, புவிசார் குறியீடு பெறுவதற்கு வழங்கப்படும் மானியம் ரூ.1 லட்சமாக உயர்த்தப்படும். அம்பத்தூர் தொழிற்பேட்டையில் வாகன பொறியியல் உதிரிப்பாக நிறுவனங்களுக்கு ரூ.5 கோடியில் ஆய்வகங்கள் அமைக்கப்படும். பழந்தண்டலில் சாலை கட்டமைப்பு மழைநீர் வடிகால் அமைக்க ரூ.5 கோடி ஒதுக்கீடு உள்ளிட்ட 5 அறிக்கைகளை வெளியிட்டார்.

error: Content is protected !!