News December 14, 2025

வாக்கு திருட்டு முழக்கத்துடன் டெல்லியில் காங்., பேரணி

image

பாஜக மற்றும் ECI மீது ராகுல் வைத்த வாக்கு திருட்டு குற்றச்சாட்டு பிஹார் தேர்தலில் அவருக்கு கைகொடுக்கவில்லை. எனினும் அதை தொடர்ந்து முன்னெடுத்து செல்லும் காங்கிரஸ், டெல்லியில் இன்று பேரணி நடத்த உள்ளது. மாலை 4 மணிக்கு ராம்லீலா மைதானத்தில் தொடங்கும் பேரணியில், சோனியா, மல்லிகார்ஜுனா கார்கே, ராகுல், பிரியங்கா உள்ளிட்ட ஏராளமான காங்கிரஸ் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.

Similar News

News December 19, 2025

2 ஆண்டு சிறை தண்டனை.. அமைச்சர் ராஜினாமா

image

மோசடி வழக்கில் 2 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற மகாராஷ்டிர அமைச்சர் மாணிக்ராவ் கோகடே தனது பதவியை ராஜினாமா செய்தார். தேசியவாத காங்கிரஸை சேர்ந்த இவர் விளையாட்டு, இளைஞர் நலன் துறைகளின் அமைச்சராக இருந்தார். 1989 – 1992 காலகட்டத்தில் ₹30,000-க்கும் குறைவான ஆண்டு வருமானம் கொண்ட பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களுக்கான திட்டத்தில், போலி ஆவணங்கள் மூலம் அப்ளை செய்ததே தற்போது பதவி பறிபோக காரணமாக அமைந்துள்ளது.

News December 19, 2025

Review: எப்படி இருக்கிறது அவதார் Fire & Ash?

image

அமைதியாக வாழ்ந்து கொண்டிருக்கும் தன் கூட்டத்தை, மங்குவான் ரைடர்ஸ் கூட்டத்திடமிருந்து ஹீரோ எப்படி காப்பாற்றுகிறார் என்பதே படத்தின் கதை. பிளஸ்: திரையில் வரும் ஒவ்வொரு காட்சியும் புல்லரிக்க வைக்கும். குறிப்பாக, படத்தின் கடைசி ஒருமணி நேரம், கற்பனைக்கும் எட்டாத பிரமிப்பை கொடுக்கின்றது. கண்டிப்பாக 3D அல்லது IMAX திரையில் பாருங்க! பல்ப்ஸ்: முதல் பாதியில் ஓவர் பேச்சு, வீச்சே இல்லை. Rating: .2.25/5.

News December 19, 2025

அடுத்த போர் மேகம்.. சீனா – தைவான் எல்லையில் பதற்றம்!

image

தைவானின் எல்லைப் பகுதிகளில் சீனாவின் 7 போர் விமானங்களும், 11 கடற்படை கப்பல்களும் அத்துமீறி நுழைந்துள்ளதாக தெரிவித்துள்ள தைவான் பாதுகாப்பு அமைச்சகம், இதற்கு பதிலடி கொடுக்க தயாராக இருப்பதாக குறிப்பிட்டுள்ளது. உக்ரைன்-ரஷ்யா, இஸ்ரேல்-காஸா, அமெரிக்கா-வெனிசுலா, தாய்லாந்து-கம்போடியா என உலகம் முழுவதும் போர்கள், மோதல்கள் நிலவி வரும் நிலையில், தைவான்-சீனாவிலும் போர் மேகங்கள் சூழ்ந்துள்ளன.

error: Content is protected !!