News November 28, 2025

வாக்கு என்னும் மையத்தில் மாவட்ட ஆட்சியர்

image

2026 சட்டமன்ற பொது தேர்தல் நடக்க உள்ள நிலையில் வாக்கு எண்ணும் மையமான வாலாஜா அரச அரசினர் மகளிர் கல்லூரியில் இன்று (நவ.28)ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் சந்திரகலா ஆய்வு செய்தார். அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அய்மன் ஜமால் மாவட்ட வருவாய் அலுவலர் தனலிங்கம் வாலாஜா வட்டாட்சியர் ஆனந்தன் மற்றும் பலர் உடன் இருந்தனர். வாக்கு எண்ணும் மையத்தில் முன்னேற்பாடு பணிகள் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Similar News

News December 3, 2025

ராணிபேட்டை: திருமணம் செய்ய போகும் பெண்கள் கவனத்திற்கு

image

அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண் திருமண உதவித்திட்டம் மூலம் படிக்காத பெண்களுக்கு 8 கிராம் தங்கக்காசு & ரூ.25,000, படித்த பெண்களுக்கு ரூ.50,000 வழங்கப்பட்டு வருகிறது. திருமணத்திற்கு 40 நாட்களுக்கு முன்அருகில் உள்ள இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் தகவலுக்கு உங்கள் மாவட்ட சமூக நல அலுவலரை தொடர்பு கொள்ளலாம். தங்கம் பெற சூப்பர் வாய்ப்பு. தெரிந்தவர்கள் அனைவருக்கும் பகிருங்கள்.

News December 3, 2025

BREAKING: ராணிப்பேட்டையில் இந்த பள்ளிகளுக்கு விடுமுறை

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரக்கோணம், நெமிலி வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று (டிச.3) விடுமுறை அளித்து என மாவட்ட ஆட்சியர் தற்போது அறிவித்துள்ளார். மாணவர்களின் பாதுகாப்பை கவனத்தில் கொண்டு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க. உங்க எரியா மழை நிலவரம் குறித்து கமெண்ட் பண்ணுங்க!

News December 3, 2025

ராணிப்பேட்டை: தாய் வீட்டுக்கு சென்று திரும்பிய பெண் சாவு!

image

நெமிலி டவுன் பகுதியை சேர்ந்தவர் புவனேஸ்வரி (27). இவர் நேற்று முன்தினம் திருத்தணியில் உள்ள தன் தாய் வீட்டுக்கு சென்று விட்டு நேற்று வீடு திரும்பினார். இந்நிலையில் வீட்டில் திடீரென மயங்கி விழுந்தார். அவரை மீட்டு அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு புவனேஸ்வரியை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். நெமிலி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!