News June 4, 2024
வாக்கு எண்ணும் மையத்தில் வாக்குவாதம்

நாகர்கோவில் கோணம் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள்- அதிகாரிகளுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. படிவம் 18 கொண்டுவரவில்லை எனக்கூறி முகவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், விரைந்து வந்த அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி படிவம் இல்லை என்றாலும் உள்ளே அனுமதிக்க அனுமதித்தனர். பின், பல்வேறு சோதனைகளுக்கு பின் வாக்கு மையத்திற்குள் முகவர்கள் அனுப்பப்பட்டு வருகின்றனர்.
Similar News
News April 20, 2025
கல்கத்தாவிலிருந்து கஞ்சா கடத்தி வந்து விற்றவர் கைது

கல்கத்தாவில் இருந்து கஞ்சா கடத்தி வந்து ஆரல்வாய்மொழி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட குருசடி பகுதியில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த ஆரல்வாய்மொழி குருசடி பகுதி சேர்ந்த ஜான் பெஞ்சமின் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து 230 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
News April 20, 2025
இயற்கை மாம்பழத்தை கண்டுபிடிப்பது எப்படி?

முக்கனியில் ஒன்றான மாம்பழத்தை பழுக்க வைக்க கார்பைடு கல்லை பயன்படுத்துகிறார்கள். இப்படி பழுக்க வைத்த பழத்தை சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு, வாந்தி போன்ற உடல் உபாதைகளை ஏற்படுத்தும். கல்லில் பழுக்க வைத்த மாம்பழத்தை கண்டுபிடிப்பது மிகவும் எளிது. மாம்பழத்தை தண்ணீரில் போட்டுப் பார்த்தால், இயற்கையாக பழுத்த மாம்பழம் தண்ணீரில் மூழ்கும். ஆனால் செயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட மாம்பழம் மிதக்கும். *SHARE* பண்ணுங்க
News April 20, 2025
கன்னியாகுமரியின் சிறந்த கோயில்கள் & வழிபாட்டு நேரம்

1. குமாரி அம்மன் கோவில்
காலை 4.30 – 12.00 மற்றும் மாலை 4.30 – இரவு 8.00
2.ஆதிகேசவப் பெருமாள் கோவில்,திருவட்டார்
காலை 6.00 – 11.00 & மாலை 5.00 – 8.00
3.திருநந்திக்கரை குகைக் கோயில்,திருவட்டாறு
காலை 5:00 – 11:00 & மாலை 5:00 – இரவு 8:00
4.நாகராஜா கோவில்,கன்னியாகுமரி
காலை 4.00 – 12.00 & மாலை 5.00 – 8.30
5.தாணுமாலயன் கோவில்,சுசீந்திரம்
காலை 4.30 – 12.30 & மாலை 4.30 – 8.30
*ஷேர் பண்ணுங்க