News June 3, 2024
வாக்கு எண்ணும் மையத்தில் ஊடக மையம்

மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்பட உள்ளன. இதில், கலந்து கொள்ளும் செய்தியாளர்களுக்கு வழிகாட்டி நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. இது தொடா்பாக நேற்று கோவை ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், பதிவான வாக்குகள் 94 வாக்கு எண்ணும் மேஜைகளில் 134 சுற்றுகளில் எண்ணப்படுகின்றன. செய்தியாளா்களுக்கு தனியாக ஊடக மையம் அமைக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News January 30, 2026
கோவையில் இங்கெல்லாம் மின்தடை

கோவையில் இன்று (ஜன.30) பல்வேறு பகுதியில் மின்தடை ஏற்படவுள்ளது. அதன்படி, காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கீரநத்தம், இடிகரை, சரவணம்பட்டி சில பகுதிகள், சிவானந்தபுரம், விஸ்வாசபுரம், காக்காபாளையம், சொக்கம்பாளையம், வில்லங்குறிச்சி, படுபம்பள்ளி, சோமையம்பாளையம், ஜிசிடி நகர், கணுவாய், தடாகம் சாலை, இருகூர், ஒண்டிப்புதூர், கண்ணம்பாளையம், சின்னியம்பாளையம், பகுதியில் மின்விநியோகம் இருக்காது.
News January 30, 2026
காந்திபுரத்தில் இளைஞர் தற்கொலை

கோவை, காந்திபுரம் பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (20). இவரது தந்தை கடந்த சில மாதங்களுக்கு முன்பு இறந்துள்ளார். இதனால் பாலகிருஷ்ணன் கடந்த சில நாட்களாகவே மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று வாழ்க்கையில் விரக்தி அடைந்து வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பின்னர் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News January 30, 2026
கோவை: தந்தை இறந்த துக்கத்தில் மகன் தற்கொலை!

கோவை காந்திபுரம் பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (20). இவரது தந்தை கடந்த சில மாதங்களுக்கு முன்பு இறந்துள்ளார். இதனால் பாலகிருஷ்ணன் கடந்த சில நாட்களாகவே மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று வாழ்க்கையில் விரக்தி அடைந்து வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பின்னர் இது குறித்து காட்டூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


