News April 26, 2024
வாக்கு எண்ணிக்கை மையத்தில் ஆட்சியர் ஆய்வு

நாடாளுமன்றத் தேர்தலில் ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதியில் பதிவு செய்யப்பட்ட வாக்கு பெட்டிகள் குரோம்பேட்டை எம்ஐடி கல்லூரியில் வாக்கு எண்ணிக்கைக்காக வைத்து பூட்டி சீலிடப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியரும் ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலருமான அருண்ராஜ் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்து அங்கு வைக்கப்பட்டிருந்த வருகை பதிவேட்டில் கையொப்பமிட்டார்.
Similar News
News September 26, 2025
செங்கல்பட்டில் கிராம சபை கூட்டம் ரத்து

தமிழ் நாட்டின் அனைத்து பகுதிகளிலும், குடியரசு, சுதந்திரம், மே தினம், காந்தி ஜெயந்தி, உட்பட்ட பல்வேறு நாட்களில் கிராம சபை கூட்டம் நடத்தப்படுகிறது. இதில் பொதுமக்கள் தேவையான அடிப்படை வசதிகள் குறித்து பேசப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்டத்தில் ஆக்.2ஆம் தேதி அன்று நடைபெறாது எனவும், அதற்கு பதில் ஆக்.11ஆம் தேதி கிராமசபை கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
News September 26, 2025
செங்கல்பட்டு: டிப்ளமோ, B.E போதும் இந்தியன் ஆயிலில் வேலை!

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் இளநிலை பொறியாளர் பணிக்கு காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மெக்கானிக்கல், எலெட்ரிக்கல், இன்ஸ்ட்ருமென்டேஷன் ஆகிய பிரிவில் டிப்ளமோ அல்லது பொறியியல் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளமாக ரூ.30,000-ரூ.1,20,000 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் செப்டம்பர் 28ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். <
News September 26, 2025
செங்கல்பட்டு: கியாஸ் சிலிண்டர் விநியோகிக்க கூடுதல் வசூலா?

செங்கல்பட்டு மக்களே கியாஸ் சிலிண்டர் விநியோகம் செய்யும்போது, கூடுதல் கட்டணம் வசூலிப்பது பெரும் பிரச்னையாக உள்ளது. அவ்வாறு வசூல் செய்யக்கூடாது என அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதை மீறி வசூல் செய்தால், முதலில் கியாஸ் ஏஜென்சியிடம் புகார் அளியுங்கள். அவர்கள் நடவடிக்கை எடுக்காவிட்டாலோ அல்லது தட்டிக்கழித்து விட்டாலோ செங்கல்பட்டு கலெக்டர் அலுவலத்தில் புகார் அளிக்கலாம். ஷேர் செய்யுங்கள்.