News April 9, 2024
வாக்கு எண்ணிக்கை மையத்தில் ஆய்வு

திண்டுக்கல் முத்தனம்பட்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட தேர்தல் அலுவலரும் ஆட்சியருமான பூங்கொடி, இன்றுநேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
Similar News
News July 8, 2025
திண்டுக்கல்லில் 4 வயது குழந்தை பரிதாப பலி

திண்டுக்கல்: ஏ.வெள்ளோடு, சிறுநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் சகாயராணி(32). இவரது கணவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு உயிரிழந்தார். இவர்களுக்கு ஜெரோன்(10), செபஸ்டின் அபர்னா(4) என இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில், தோமையார்புரம் அருகே ஓர் உறவினர் வீட்டிற்கு குழந்தைகளுடன் ஆட்டோவில் சென்றுகொண்டிருந்த போது ஆட்டோ கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இதில், சிறுமி செபஸ்டின் அபர்னா பரிதாபமாக உயிரிழந்தார்.
News July 8, 2025
தூய்மை பணியாளர்களுக்கான சிறப்பு குறைதீர்ப்பு கூட்டம்!

திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வருகின்ற 08.07.2025 அன்று காலை 11.00 மணியளவில் தூய்மை பணியாளர்களுக்கான சிறப்பு குறைதீர்ப்பு கூட்டம்
நடைபெறவுள்ளது. குறைதீர்ப்பு கூட்டத்தில் அனைத்து வகையான தூய்மைப்பணியாளர்களும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என மாவட்ட ஆட்சித்தலைவர் செ.சரவணன், தெரிவித்துள்ளார்.
News July 8, 2025
திண்டுக்கல் கலெக்டர் தலைமையில் சிறப்பு முகாம்!

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் முன்னாள் பாதுகாப்பு படைவீரர்களுக்கான ஸ்பார்ஷ் (SPARSH) ஓய்வூதிய குறைதீர்ப்பு முகாம், மாவட்ட ஆட்சியர் செ.சரவணன் தலைமையில் இன்று (07.07.2025) நடைபெற்றது. கூட்டத்தில் பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்நிகழ்வில் துறை சார்ந்த அதிகாரிகள் உடன் இருந்தனர்.