News March 21, 2024
வாக்கு எண்ணிக்கை மையத்தில் ஆட்சியர் ஆய்வு

அரக்கோணம் மக்களவை தொகுதிக்குட்பட்ட தொகுதிகளில் பதிவாகும் வாக்குகளை எண்ணும் வாக்கு எண்ணிக்கை மையம் வாலாஜா அறிஞர் அண்ணா அரசினர் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற உள்ளது. இந்நிலையில் வாக்கு என்னும் மையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடுகள் பணிகளை மாவட்ட ஆட்சியர் வளர்மதி இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
Similar News
News September 10, 2025
ராணிப்பேட்டை மக்களே இதை நோட் பண்ணிக்கோங்க

ராணிப்பேட்டை மாவட்டத்தில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம்கள் நடைபெறுகின்றன. இதில், சாதி சான்றிதழ், பட்டா மாற்றம், மகளிர் உரிமைத் தொகை, மருத்துவ காப்பீட்டு அட்டை, ஆதார், ரேஷன் அட்டை திருத்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. அரசு அலுவலகங்களுக்கு அலையாமல், <
News September 10, 2025
சோளிங்கர் நகர் மன்றத்தில் கவுன்சிலர் தர்ணா

ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் நகர் மன்ற கூட்டத்தில் திமுகவை சேர்ந்த நகராட்சித் தலைவர் தமிழ்ச்செல்வியை கண்டித்து, திமுக பெண் கவுன்சிலர் மோகனா சண்முகம் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். தனது வார்டில் கால்வாய் டெண்டர் விடப்பட்டும், கடந்த நான்கு ஆண்டுகளாக கட்டுமான பணிகள் தொடங்காததை கண்டித்து இன்று போராட்டத்தில் ஈடுபட்டார்.
News September 10, 2025
ராணிப்பேட்டை: குண்டர் சட்டத்தில் 5பேர் கைது

ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அய்மன் ஜமால் பரிந்துரையின் பேரில் இரத்தினகிரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கொலை குற்றத்தில் ஈடுபட்ட சுதாகர், ஆனந்த், வினித், பிரேம்குமார் ரிகன் சுரேஷ் ஆகியோர் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டு நேற்று வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் குற்றங்களை குறைக்கவும் கண்காணிப்பாளர் அறிவுரை வழங்கினார்.