News June 4, 2024

வாக்கு எண்ணிக்கையில் மந்தம்

image

நாகை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட, நன்னிலம் சட்டமன்றத் தொகுதியில் வாக்கு எண்ணிக்கை காலை முதலே மிகவும் மந்தமான முறையில் நடைபெற்று வருகிறது. இதுவரை 15 சுற்றுகளில் வாக்கு எண்ணிக்கை நிறைவு பெற்ற நிலையில், மீதமுள்ள சுற்றுகள் எண்ணும் பணி துவங்கி உள்ளது. ஏற்கனவே எண்ணிய சுற்றுக்களில் குளறுபடி இருப்பதால் மூன்று பெட்டிகள் மீண்டும் மறுமுறை எண்ணப்படுகிறது.

Similar News

News November 20, 2024

நாகப்பட்டினம் மாவட்டதிற்கு ஆரஞ்சு அலெர்ட்

image

நாகபட்டினம் மாவட்டத்தில் கடந்த ஒரு சில தினங்களாக கன மழை பெய்து வந்த நிலையில் இன்று (20/11/2024) புதன்கிழமை காலை முதல் நாகையின் பல பகுதியில் பலத்த மழை கொட்டி தீர்த்து வருகிறது. நாகையில் விடாமல் பெய்யும் கானமழையினால் நாகப்பட்டினம் மாவட்டதிற்கு ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. நாகையில் கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

News November 20, 2024

நாகை ஏடிஎஸ்பி, டிஎஸ்பி இடமாற்றம்

image

நாகப்பட்டினம் கூடுதல் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த எஸ்.செல்வகுமார் சென்னை ஊனமஞ்சேரியில் உள்ள தமிழ்நாடு காவல்துறை அகாடமிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதைப்போல், நாகப்பட்டினம் துணை கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் கடலூர் மாவட்டம் விருதாச்சலம் துணை கண்காணிப்பாளராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார் என காவல்துறை தலைவர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.

News November 20, 2024

நாகை மாவட்டத்தில் கனமழை வாய்ப்பு

image

தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழக டெல்டா மாவட்டங்களில் கடந்த ஒரு வாரமாக தொடர் கனமழை மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நாகை மாவட்டத்தில் வரும் நவ.26 ஆம் தேதி கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. உங்கள் பகுதியில் மழை பெய்கிறதா? கமெண்டில் தெரிவிக்கவும். SHARE NOW!