News April 16, 2024
வாக்குப்பதிவு இயந்திரம் பாதுகாப்பு பணிகள் ஆய்வு

மக்களவை பொதுத் தேர்தலையொட்டி கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் ஓசூர் சட்டமன்ற தொகுதியில் வாக்குப்பதிவிற்கு பயன்படுத்தப்படவுள்ள, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இருப்பறை பாதுகாப்பு பணிகளை தேர்தல் பொதுப் பார்வையாளர் கிரண் குமாரி பாசி நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வுமேற்கொண்டார்.
Similar News
News September 18, 2025
ஓசூரை புதிய மாவட்டமாக அறிவிக்க கோரிக்கை

ஒசூரை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்க வேண்டும் என ஒசூா் அனைத்துக் குடியிருப்போா் நலச் சங்கம் சாா்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ளது. ஒசூரில் மண் சாலைகளை தார் சாலைகளாக மாற்றவும், வணிக மையம் அமைக்கவும், கிருஷ்ணகிரி வழியாக ஜோலார்பேட்டை இரயில்வே திட்டத்தை நிறைவேற்றவும் கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளன.
News September 18, 2025
கிருஷ்ணகிரி மாவட்டம் இன்று இரவு ரோந்து பணி விவரம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று (செப்.18) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. வேலை செல்லும் பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க
News September 17, 2025
கிருஷ்ணகிரி: எச்.ஐ.வி., விழிப்புணர்வு பிரச்சாரம்

தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கத்தின் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகு சார்பில், எச்.ஐ.வி., எய்ட்ஸ், பால்வினை நோய்கள் மற்றும் போதைப்பொருள் பழக்கம் ஒழிப்பு குறித்த தீவிர விழிப்புணர்வுப் பிரச்சார நிகழ்ச்சி, இன்று (செப்.17) ஆட்சியர் தினேஷ் குமார் தொடங்கி வைத்தார். ஆட்டோக்களில் எய்ட்ஸ் தடுப்பு விழிப்புணர்வு குறித்த ஸ்டிக்கர்களை ஒட்டினார்.