News January 23, 2026

வாக்குப்பதிவு இயந்திரம் செயல்முறை விளக்க மையங்கள்

image

கடலூர் மாவட்டத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் தாம் அளித்த வாக்கினை சரிபார்க்கும் கருவியை பயன்படுத்துவது குறித்து செயல்முறை விளக்க மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. 9 சட்டமன்ற தொகுதிகளிலும், வட்டாட்சியர் அலுவலகங்களில் அமைக்கப்பட்டுள்ளது என்றும், நடமாடும் வாகனம் மூலம் செயல்முறை விளக்கம் அளிக்கப்படும் என்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் சிபி ஆதித்யா செந்தில் குமார் தெரிவித்துள்ளார்.

Similar News

News April 9, 2026

கடலூர்: மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி..!

image

பண்ருட்டி அருகே உள்ள மருங்கூரை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி கருணாநிதி (55). இவர் மானடிக்குப்பத்தை சேர்ந்த ரங்கநாதன் என்பவரது வீட்டில் இருந்த புளியமரத்தில் ஏறி, புளி உளுக்கிக் கொண்டிருந்தார். அப்போது மரத்தின் கிளை எதிர்பாராத விதமாக அருகில் சென்ற மின்கம்பியின் மீது உரசியதில் மின்சாரம் தாக்கி கருணாநிதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

News April 8, 2026

கடலூர்: விஜய் பிரச்சாரம் ரத்து

image

கடலூர் மஞ்சைநகர் மைதானத்தில் தவெக தலைவர் விஜய் நாளை பிரச்சாரம் மேற்கொள்ள இருந்தார். அதனை முன்னிட்டு காவல்துறையினர் நிபந்தனைகளை விதித்துள்ளனர். அதில், காலை 10 மணிக்கு தொடங்குய பிரச்சாரத்தை 1 மணிக்குள்ளாக முடிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது திடீரென பிரச்சாரம் ரத்து செய்யப்பட்டது.

News April 8, 2026

கடலூர்: ரூ.755 செலுத்தினால் ரூ.15 லட்சம் காப்பீடு!

image

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும், ‘இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி’, பொதுக் காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து, ஆண்டிற்கு வெறும் ரூ.520, ரூ.555, ரூ.755 பீரீமியத்தில், ரூ.5 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீட்டு திட்டத்தை வழங்குகிறது. 18 வயது முதல் 65 வயது உள்ளவர்கள் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம். உடனே அருகிலுள்ள தபால் நிலையத்தை அனுகவும். SHARE பண்ணுங்க.

error: Content is protected !!