News August 21, 2024
வாக்குப்பதிவு இயந்திரங்கள் பார் கோடு ஸ்கேன் பண்ணும் பணி

திண்டுக்கல் ஆட்சியர் வளாகத்தில் அமைந்துள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைப்பறை வளாகத்தில் அமைந்துள்ள strong ரூமில் பாராளுமன்ற பொதுத்தேர்தல்-2024 முடிந்ததை ஒட்டி 2008 &2009 பெங்களூர் பெல் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை பார் கோடு ஸ்கேன் பண்ணும் பணி அனைத்துக் கட்சி பிரமுகர்கள் மற்றும் தேர்தல் அலுவலர்கள் முன்னிலையில் சரிபார்ப்பு பணி இன்று நடைபெற்றது.
Similar News
News August 8, 2025
ஐ டி ஐ மாணவிகளுக்கு போலீசார் விழிப்புணர்வு

திண்டுக்கல் குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு ஆய்வாளர் அமுதா தலைமையில் சிறப்பு சார்பு ஆய்வாளர் மகாலட்சுமி, காவலர்கள் திண்டுக்கல் ஐடிஐ-ல் படிக்கும் மாணவிகளுக்கு குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், பெண் குழந்தைகளுக்கு ஏற்படும் பாலியல் தொந்தரவு குறித்தும் போக்சோ சட்டத்தை பற்றியும், போதைப்பொருள் தடுப்பு, ஆன்லைன் பண பரிவர்த்தனை குறித்தும், சைபர்கிரைம் குற்றங்கள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
News August 7, 2025
திண்டுக்கல் இரவு நேர ரோந்து காவலர்கள்!

திண்டுக்கல் மாவட்டத்தில் (ஆகஸ்ட் 07) இரவு 11 மணி முதல் வெள்ளிக்கிழமை மாலை 6 மணி வரை நிலக்கோட்டை, பழனி, ஒட்டன்சத்திரம், கொடைக்கானல், வேடசந்தூர் உள்ளிட்ட பகுதிகளில் காவல் துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். பொதுமக்கள் அவசர தேவைகளுக்காக காவல் துறை வெளியிட்டுள்ள தொலைபேசி எண்களுடன் தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
News August 7, 2025
திண்டுக்கல் மாவட்டத்தின் விழிப்புணர்வு புகைப்படம்

திண்டுக்கல் மாவட்ட காவல்துறையின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான விழிப்புணர்வு புகைப்படம் வெளியிடப்பட்டு வருகிறது. அதேபோல் இன்று (ஆன்லைனில் குறைந்த வட்டிக்கு கடன் தருவதாக வரும் போலியான கடன் செயலிகளை ” loan app ” நம்பி ஏமாற வேண்டாம்) என்ற வாசகம் பொருந்திய விழிப்புணர்வு புகைப்படத்தை திண்டுக்கல் மாவட்ட காவல்துறையின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இன்று வெளியிடப்பட்டுள்ளது.