News March 23, 2024
வாக்குப்பதிவுக்கு தயாராகும் மின்னணு இயந்திரங்கள்

திருநெல்வேலி மாவட்டத்தில் மக்களவை தொகுதிக்கு வருகிற ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்கான ஆயத்தப் பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலரும் கலெக்டருமான கார்த்திகேயன் தலைமையில் அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஐந்து சட்டமன்ற தொகுதிகளில் தேவையான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பிரித்து தயார் செய்யும் பணி நடைபெறுகிறது.
Similar News
News February 18, 2026
விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்ட தேதி அறிவிப்பு

பிப்ரவரி மாதத்திற்கான நெல்லை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 20ம் தேதி மூன்றாவது வெள்ளிக்கிழமை பகல் 10 மணிக்கு மாவட்ட கலெக்டர் அலுவலக இரண்டாம் தளம் கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. ஏற்கனவே வழங்கிய கோரிக்கைகள் மீது பதில் அளிக்கப்பட உள்ளது. எனவே விவசாயிகள் பங்கேற்று பயனடையலாம் என கலெக்டர் சுகுமார் தெரிவித்துள்ளார்.
News February 18, 2026
5 மாவட்ட பயிற்சியாளர்களுக்கு தடகளப் போட்டி தேதி அறிவிப்பு

நெல்லை மாவட்ட கலெக்டர் விடுத்துள்ள செய்தி குறிப்பு 2025 – 26ம் ஆண்டிற்கான நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, குமரி, விருதுநகர் மாவட்டங்களை உள்ளடக்கிய நெல்லை மண்டல பயிற்சியாளர்களுக்கான தடகள விளையாட்டு போட்டி 24ம் தேதி காலை 9 மணி முதல் பாளை அண்ணா விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது. அந்தந்த மாவட்ட தடகளப் போட்டியில் வெற்றி பெற்ற அரசு, தனியார் தொழிற் பயிற்சி நிலைய ஆண், பெண் பயிற்சியாளர்கள் பங்கேற்பார்கள்.
News February 18, 2026
நெல்லை: குழந்தைகளுக்கு மாதம் ரூ.4,000 நிதியுதவி

மத்திய அரசின் ‘மிஷன் வத்சல்யா’ குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், ஒரு குடும்பத்தில் அதிகபட்சமாக இரண்டு குழந்தைகளுக்கு, மாதம் தலா ரூ.4,000 வீதம் மூன்று ஆண்டுகளுக்கு நிதியுதவி வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தை பெற வருமானச் சான்றிதழ் மட்டுமே போதுமானது. நீங்கள் இ-சேவை மையம் மூலமாகவோ அல்லது மதுரை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலுவலகத்தில் நேரடியாகவோ விண்ணப்பிக்கலாம். SHARE IT


