News March 22, 2024
வாக்குச் சாவடி அலுவலா்களுக்கு பயிற்சி வகுப்பு

ஆண்டிபட்டி வேளாங்கன்னி மாதா பள்ளி, போடி ஜ.கா.நி.மெட்ரிக் பள்ளி, தேனி மேரிமாதா மெட்ரிக் பள்ளி, வீரபாண்டி கலை அறிவியல் கல்லூரி, உத்தமபாளையம் ஹாஜி கருத்த ராவுத்தர் ஹவுதியா கல்லூரி ஆகிய இடங்களில் வருகின்ற 24 ஆம் தேதி முதல் கட்ட தேர்தல் பயிற்சி வகுப்பு நடைபெறுகிறது. இதில் சம்மந்தப்பட்ட சட்டப் பேரவை தொகுதிகளின் வாக்குச் சாவடி அலுவலா்கள் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என ஆட்சியர் அறிவித்துள்ளார்.
Similar News
News February 16, 2026
தேனி: வீடு கட்ட ரூ.2.10 லட்சம் உதவி!

முதலமைச்சரின் பசுமை வீடு திட்டம் பற்றி தெரியுமா? வீடு இல்லமால் தவிக்கும் குடும்பங்களுக்கு இலவசமாக 300 சதுரடியில் ரூ.2.10 லட்சம் மதிப்பில் மழை நீர் சேகரிப்பு வசதி, 5 சூரிய சக்தியால் இயங்கும் CF விளக்கு வசதியுடன் வீடு கட்டி தரப்படும். இந்த திட்டத்தில் நீங்களும் பயனடைய வேண்டுமா? உங்கள் கிராம பஞ்சாயத்து அலுவலகத்தில் தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பித்தால் வீடு கட்டும் கனவு நிறைவேறும். SHARE பண்ணுங்க.
News February 16, 2026
தேனி: 35 கிலோ கஞ்சா பறிமுதல்; 3 பேர் கைது

குமுளி, லோயர் கேம்பில் காவல் உதவி ஆய்வாளர் சூர்யதிலகராணி தலைமையில் வாகன தணிக்கை நடைபெற்றது. மதுரையிலிருந்து கேரளத்துக்கு சென்ற காரை சோதனையிட்டதில் 35 கிலோ கஞ்சா கடத்தல் கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் மதுரை முனிச்சாலை காமராஜபுரத்தைச் சேர்ந்த செல்வி (47), முனியசாமி (36), பாலசுப்பிரமணி (38) கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 35 கிலோ கஞ்சா மற்றும் ரூ.1.18 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
News February 16, 2026
தேனி: மின்சாரம் தாக்கி ஒருவர் பலி

ஆண்டிபட்டியை அடுத்த சக்கம்பட்டியைச் சேர்ந்த நாராயணசாமி (42) வீட்டருகே உணவகம் நடத்தி வந்தார். சனிக்கிழமை வீட்டில் மின் சுவிட்சை போட்டபோது மின் கசிவு ஏற்பட்டு உடலில் மின்சாரம் பாய்ந்தது. பலத்த காயமடைந்த அவரை ஆண்டிபட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். சம்பவம் குறித்து ஆண்டிபட்டி காவல் நிலையம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


