News September 18, 2025

வாக்குச்சாவடி மறுசீரமைப்பு ஆலோசனை கூட்டம்

image

திருவள்ளுர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் மு.பிரதாப் தலைமையில் வரைவு வாக்குச்சாவடி பட்டியல் வெளியிடப்பட்டு வாக்குச்சாவடி மறுசீரமைப்பு தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விவேகானந்த சுக்லா, மாவட்ட வருவாய் அலுவலர், பல்வேறு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

Similar News

News September 18, 2025

தாத்தா இரட்டைமலை சீனிவாசன்; திருவள்ளூர் எம்.பி பதிவு

image

திருவள்ளூர் பாராளுமன்ற உறுப்பினர் சசிகாந்த் செந்தில் இரட்டைமலை சீனிவாசன், ஒடுக்கப்பட்டோர் உரிமைக்காக தனி அமைப்பை நிறுவி தீண்டாமை ஒழிப்பு, கோயில் நுழைவு, நில உரிமை, கல்விக்கு நிதி ஒதுக்கீடு போன்றவற்றுக்காக போராடியவர். தமிழக மக்களால் தாத்தா என அன்போடு அழைக்கப்பட்ட இரட்டைமலை சீனிவாசன் பற்றி தனது பதிவு மூலம் நினைவுகூர்ந்தார்.

News September 18, 2025

திருவள்ளூர்: வேலை தேடுபவர்களுக்கு குட்நீயூஸ்

image

திருவள்ளுர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலக வளாகத்தில், நாளை 19ம் தேதி 25-க்கும் மேற்பட்ட தனியார்துறை நிறுவனங்கள் கலந்து கொள்ளும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் 8ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை பயின்றவர்கள் கலந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News September 18, 2025

திருவள்ளூர் இளைஞர்களே கடைசி வாய்ப்பு..!

image

திருவள்ளூர் மாவட்டத்தில் இயங்கி வரும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் சுயநிதி, தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் அரசு ஒதுக்கீடு இடங்களில் சேர்வதற்கு விண்ணப்பிக்க வரும் செப்டம்பர் 30-ஆம் தேதி வரை கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது. மேலும்,  www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் சென்று விண்ணப்பித்து மாணவர்கள் பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!