News December 10, 2025
வாக்காளர் பட்டியல்: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

திருவாரூர் மாவட்டத்திற்கு உட்பட்ட 4 சட்டமன்ற தொகுதிகளில் அமைந்துள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் பெயர் சேர்த்தல் படிவம் 6 உதவி சேவை மையங்கள் வரும் டிச.,11-ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் தகுதி உடைய நபர்கள் படிவம் 6-ல் விண்ணப்பித்து பெயரினை சேர்த்து பயனடையுமாறு திருவாரூர் ஆட்சியர் மோகனச்சந்திரன் கேட்டுக் கொண்டுள்ளார்.
Similar News
News December 12, 2025
திருவாரூர்: மகளிர் உரிமைத்தொகை வழங்கும் விழா

திருவாரூர் மாவட்டத்தில், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பயன்பெறும் இரண்டாம் கட்ட விரிவாக்கம், நாளை பவித்திரமாணிக்கம் மங்கள வரதர் மஹாலில் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாலை 3 மணி அளவில் தமிழக முதல்வர் ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைக்க இருப்பதாக, திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கே. கலைவாணன் தெரிவித்துள்ளார்.
News December 11, 2025
திருவாரூர் காவலர்களுக்கு அதிநவீன கருவிகள்

திருவாரூர் மாவட்டத்தில் பணியாற்றும் காவல் அலுவலர்களுக்கு, தமிழக அரசின் நவீன மக்கள் திட்டத்தின் கீழ், தொழில்நுட்பத்துடன் கூடிய வான் செய்தி கருவிகள் புதிதாக திருவாரூர் மாவட்ட காவலர்களுக்கு இன்று வழங்கப்பட்டது. மாவட்ட காவல் அலுவலகத்தில், இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் அதனை வின் கருவிகளை கண்காணிப்பாளர் கருண் கரட் வழங்கினார்.
News December 11, 2025
திருவாரூர்: இனி வங்கி செல்ல தேவையில்லை!

உங்களது வங்கி கணக்கின் ACCOUNT BALANCE, STATEMENT, LOAN உள்ளிட்ட சேவைகளை வாட்ஸ்ஆப் வழியாக பெற முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? SBI (90226-90226), கனரா வங்கி (90760-30001), இந்தியன் வங்கி (8754424242), இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (96777-11234) இதில் உங்களது வங்கியின் எண்ணை போனில் SAVE செய்து, ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், தகவல்கள் அனைத்தும் வாட்ஸ்ஆப் வாயிலாக அனுப்பி வைக்கப்படும். SHARE IT!


