News January 21, 2026
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்த பணி- ஆட்சியர் ஆய்வு

விழுப்புரம் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்த பணிகள் நடைபெற்றது. இந்த பணி குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் / ஆட்சியர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான், இன்று (ஜன.21) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் உதவி வாக்காளர் பதிவு அலுவலர் மகாதேவன், தனி வட்டாட்சியர் (குடிமை பொருள்) ஆனந்தன் உட்பட பலர் உள்ளனர்.
Similar News
News January 24, 2026
விழுப்புரம்: உங்கள் கனவு இல்லத்தை நினைவாக்க (CLICK)

விழுப்புரம் மக்களே, உங்கள் சொந்த ஊரில் வீடு கட்ட வேண்டும் என நீண்ட கால ஆசை உள்ளதா? இதற்காகதான் தமிழக அரசு கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தை செயல்படுத்துகிறது. வீடு இல்லாதவர்கள் தகுந்த ஆவணங்களுடன் பஞ்சாயத்து ஆபீஸுக்கு நேரில் சென்று விண்ணப்பிக்கலாம். பின் மாவட்ட ஆட்சியர் ஒப்புதலுடன் வீடு கட்டிதரப்படும். வீடு கட்ட ஆசைப்படுபவர்களுக்கு ஷேர் பண்ணுங்க!
News January 24, 2026
விழுப்புரம்: ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு பெறுவது எப்படி?

விழுப்புரம் மக்களே, மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம். 1) விண்ணப்பிக்க அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகலாம். 2) அல்லது<
News January 24, 2026
விழுப்புரத்தில் அதிரடி கைது!

செஞ்சி சந்தைத்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் சிவக்குமார் இவர் நேற்று முன்தினம் செஞ்சி காவல் நிலையத்திற்கு சென்று அங்கு பணியில் இருந்த ஏட்டு ஸ்ரீதரிடம் தனது வங்கி கணக்கை வங்கி நிர்வாகம் முடக்கி விட்டதாக கூறினார். மேலும், உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரி ஸ்ரீதரை கத்தியை காட்டி மிரட்டி உள்ளார். அதனால் ஸ்ரீதர் உயர்அதிகாரியிடம் தெரிவிக்க செஞ்சி போலீசார் சிவகுமாரை கைது செய்தனர்.


