News November 5, 2025
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் 2026

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் 2026 முக்கிய தினங்கள் 4 நவம்பர் முதல் 4 டிசம்பர் 2025 வரை பெயர் சேர்த்தல் மற்றும் மறுப்பு தெரிவித்தல் 9 டிசம்பர் முதல் ஜனவரி 8 2026 வரை வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடுதல் 9 டிசம்பர் 2025 செவ்வாய்க்கிழமை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளலாம் கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் மீ தங்கள் இ.ஆ.ப தெரிவித்துள்ள செய்தி
Similar News
News November 5, 2025
கரூர்: ஆடு, கோழி பண்ணை அமைக்க ரூ.20 லட்சம் மானியம்!

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்றவும், தொழில்முனைவு வாய்ப்புகளை அதிகரிக்கவும் அரசு கொண்டுவந்துள்ள ஒரு சூப்பர் திட்டம் தான் உத்யமி மித்ரா. இத்திட்டத்தின் கீழ் ஆடு, கோழி உள்ளிட்ட கால்நடை பண்ணைகள் அமைக்க ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் nlm.udyamimitra.in என்ற இணையதளம் வாயிலாக தகுதிகளை கண்டறிந்து விண்ணப்பிக்கலாம்.ஷேர் பண்ணுங்க.
News November 5, 2025
கிருஷ்ணராயபுரம் இளைஞர் மர்ம மரணம்!

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் தாலுகா மேட்டு மகாதானபுரம் பகுதியை சேர்ந்தவர் நாகராஜ் மகன் சண்முகம் (21). கூலி தொழிலாளியான இவர் நேற்று நண்பர்களுடன் சென்றபோது தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பிறகு வீட்டில் வந்த சண்முகம் அதிகாலை பார்த்த போது இறந்த நிலையில் கிடந்துள்ளார். இந்த சம்பவ குறித்து குளித்தலை டிஎஸ்பி செந்தில்குமார் தலமைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News November 5, 2025
கரூர்: போனில் இருக்க வேண்டிய முக்கிய எண்கள்!

தற்போது அவசர உதவிக்கு 100, ஆம்புலன்ஸ் சேவைக்கான 108, தீயணைப்பு துறைக்கான 101 போன்ற எண்கள் பதியப்பட்டே வருகின்றன. இது தவிர நாம் சேமித்து வைத்திருக்க வேண்டிய எண்கள் சில உள்ளன அதை பற்றி பார்க்கலாம். பெண்களுக்கான அவசர உதவி – 1091, குழந்தைகளுக்கான பாதுகாப்புக்கு – 1098, பெண்கள் மீதான வன்கொடுமைக்கு – 181, பெண்கள், குழந்தைகள் காணாமல் போனால் – 1094 இந்த முக்கிய எண்களை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!


