News February 17, 2025
வாக்காளர் பட்டியலில்: 33,000 பேர் விண்ணப்பம்

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கவும், பிழைகள் திருத்தம் செய்யவும் கடந்த 3 மாதங்களாக பலர் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தனர். அதன்படி கோவை மாவட்டத்தில் புதிதாக பெயர் சேர்க்க 9,328 பேரும், நீக்கம் செய்ய 6,306 பேரும், பிழைகள் திருத்தம் செய்ய 18,244 பேர் என மொத்தம் 33,878 பேர் விண்ணப்பித்தனர் என மாவட்ட தேர்தல் பிரிவினர் தெரிவித்தனர்.
Similar News
News January 9, 2026
கோவை: வீட்டில் சிலிண்டர் இருக்கா?

கேஸ் சிலிண்டருக்கு மானியம் வருகிறதா? என்பதை SMS அனுப்பி தெரிந்து கொள்ளலாம். இண்டேன் சிலிண்டர் பயன்படுத்துவோர் ‘REFILL’ என டைப் செய்து 77189 55555 என்ற எண்ணுக்கு அனுப்ப வேண்டும். பாரத் சிலிண்டர் பயன்படுத்துவோர் 18002 24344 என்ற எண்ணுக்கும், எச்.பி. சிலிண்டர் பயன்படுத்துவோர் 1906 என்ற எண்ணுக்கும் அனுப்பி தெரிந்து கொள்ளலாம். (ஷேர் செய்யுங்கள்)
News January 9, 2026
கோவையில் பச்சிளம் குழந்தை உயிரிழப்பு: காரணம் என்ன?

கோவை, ராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்தவர் வரதலட்சுமி (23). இவருக்கு 18 நாட்களுக்கு முன்பு ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் நேற்று உடல் நிலை சரியில்லை என மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். மருத்துவர்கள் சோதனை செய்த போது குழந்தை உயிரிழந்ததாக தெரிவித்தனர். பால் குடிக்கும்போது புரை ஏறியதால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு அந்த குழந்தை உயிரிழந்தது தெரியவந்தது. போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
News January 9, 2026
கோவை: டிக்கெட் வேணுமா..‘Hi’ சொல்லுங்க

பொங்கல் தொடர் விடுமுறையை முன்னிட்டு பல்வேறு ஊர்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. இதுவர டிக்கெட் முன்பதிவு செய்யலயா? உடனே 94440-18898 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப் பண்ணுங்க. அதில் கேட்கும் ஆப்சன்களை கிளிக் செய்து முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும், பேருந்து இயக்கம் தொடர்பான புகார்களுக்கு 94450-14436 (அ) 1800 425 6151 என்ற எண்ணை அழைக்கலாம். (SHARE)


