News March 25, 2026

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க உடனே இத பண்ணுங்க!

image

சட்டப்பேரவை தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க நாளையே(26.03.2026) கடைசி நாளாகும். ஆன்லைனில் விண்ணப்பிக்க உடனே, <>voters.eci.gov.in<<>> என்ற வெப்சைட்டுக்கு செல்லுங்கள். படிவம் 6-ஐ சமர்ப்பித்து விண்ணப்பிக்கவும். அல்லது ECINet செயலி மூலமும் விண்ணப்பிக்கலாம். தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் வரும் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தலில் வாக்களிப்பது அனைவரது கடமையாகும். SHARE IT.

Similar News

News April 7, 2026

பூனம் பாண்டேவின் ஐடியா.. வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

image

இந்தியா உலகக் கோப்பையை வென்றால் நிர்வாணமாக வருவேன் என்பது உள்ளிட்ட பல சர்ச்சை கருத்துகளை வெளியிட்டு பிரபலமானவர் பூனம் பாண்டே. இந்நிலையில், சரியோ தவறோ நம்மை பற்றி அனைவரும் பேச வேண்டும், அதற்கேற்ப நாமும் நடந்துகொள்ள வேண்டும் என பூனம் பாண்டே கூறியுள்ளார். இப்படி செய்தால் தான் சினிமாவில் நாம் கவனிக்கப்படுவோம் என்றும் தெரிவித்துள்ளார். இதற்கு ஆதரவாகவும், எதிர்த்தும் கருத்துகள் பகிரப்படுகின்றன.

News April 7, 2026

குறுக்கு வழியில் எதிரிகளின் கீழ்தரமான செயல்: சுந்தர்.சி

image

தேர்தலில் வெற்றிபெற்றால் மதுரை மத்திய தொகுதியில் ‘இறைச்சி கடைகளை மூடுவேன்’ என தான் கூறியதாக வெளியாகும் செய்தி முற்றிலும் போலியானது என சுந்தர்.சி தெரிவித்துள்ளார். மக்களின் உணர்வுகளையும் உரிமைகளையும் மதிக்க தெரிந்தவன் நான் என்பது மக்களுக்கே தெரியும். போட்டியை நேரடியாக எதிர்கொள்ள தைரியமின்றி குறுக்கு வழியை நாடுவோரின் இதுபோன்ற கீழ்தரமான செயல்களுக்கு வெற்றியால் பதிலடி தருவோம் என கூறியுள்ளார்.

News April 7, 2026

தமிழகத்தில் இத்தனை பேர் வேட்பு மனு தாக்கலா?

image

2026 தேர்தலில் போட்டியிட 7,594 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்றைய தினமே வேட்பு மனு பரீசிலனை நடைபெற்று, மாலைக்குள் தள்ளுபடியாகும் வேட்பு மனுக்களின் விவரங்கள் தெரியவரும். வேட்பு மனுக்களை திரும்பப் பெற கடைசி நாள் ஏப்.9 ஆகும். இதன்படி, அன்றைய நாள் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாகும். ஏப்.23-ல் தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

error: Content is protected !!