News January 18, 2026
வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்க்க இன்றே கடைசி

தமிழகத்தில் 2025 நவம்பர் 4-ம் தேதி SIR பணிகளை ECI தொடங்கியது. கடந்த டிசம்பர் மாதம் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் இடம்பெறாத வாக்காளர்கள் பட்டியலில் தங்கள் பெயரை சேர்க்க ஜனவரி 18-ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டு இருந்தது. இதுவரை பட்டியலில் பெயரை சேர்க்க சுமார் 18 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இறுதி வாக்காளர் பட்டியல் பிப்.17-ம் தேதி வெளியாகும்.
Similar News
News March 28, 2026
வாக்கும் எண்ணும் மையத்தை ஆய்வு செய்த ஆட்சியர்

திருப்பத்தூரில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளில் பதிவாகும் வாக்குகளை எண்ணுவதற்கு, வாணியம்பாடி மருதர் கேசரி ஜெயின் கல்லூரியில் மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை ஆட்சியர் சிவசௌந்திரவள்ளி நேற்று நேரில் சென்று முன்னேற்பாடுகள் பணிகள் குறித்து ஆய்வு செய்தார். இதில் கூடுதல் தேர்தல் அலுவலர் நாராயணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
News March 28, 2026
BREAKING: தோனிக்கு காயம்!

தோனியை விரைவில் கிரவுண்டில் பார்க்கலாம் என காத்திருந்த ரசிகர்களுக்கு ஷாக்கிங் நியூஸ் ஒன்று வந்துள்ளது. பயிற்சியின் போது, அவருக்கு கெண்டைக்கால் தசைப்பிடிப்பு ஏற்பட்டுள்ளதாம். இதனால், அடுத்த 15 நாள்களுக்கு ரெஸ்ட்டில் இருப்பார் என்றும், வரும் 30-ம் தேதி RR-க்கு எதிரான மேட்ச்சில் விளையாடமாட்டார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சில நாள்களுக்கு முன், தோனி <<19438278>>தாங்கி தாங்கி<<>> நடந்து வந்த வீடியோ வைரலானது.
News March 28, 2026
மார்ச் 30-ல் வேட்புமனு தாக்கல் செய்கிறாரா விஜய்?

முதல் முறையாக தேர்தலில் களமிறங்கும் விஜய், வரும் 30-ம் தேதி, மதியம் 12 மணிக்கு வேட்பு மனு தாக்கல் செய்யப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் பெரம்பூர் தொகுதியில் போட்டியிடவுள்ளதாக கூறப்படுகிறது. தவெக வேட்பாளர்கள் அனைவரும் அன்றைய தினமே வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளனர். வேட்பு மனு தாக்கல் செய்த கையோடு, பெரம்பூரில் இருந்தே தன் பிரசாரத்தை தொடங்க விஜய் திட்டமிட்டுள்ளாராம். <<-se>>#TNElection2026<<>>


