News December 25, 2025
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க ஆட்சியர் அறிவிப்பு

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க திருத்தம் செய்ய டிசம்பர் 27 மற்றும் 28 ஜனவரி 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 1247 வாக்குச்சாவடி மையங்களிலும் 4 நாட்களுக்கு சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இந்த முகாமில் தகுதியான அனைத்து வாக்காளர்களும் கலந்து கொண்டு தங்களது பெயர்களை சேர்க்கலாம் என்று ஆட்சியர் சந்திரகலா இன்று டிசம்பர் 24ஆம் தேதி தெரிவித்துள்ளார்.
Similar News
News January 22, 2026
அறிவித்தார் ராணிப்பேட்டை கலெக்டர்!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் ஜன 26-ந் தேதி குடியரசு தினத்தன்று காலை 11 மணிக்கு தவறாமல் கூட்டப்பட வேண்டும் என அனைத்து கிராம ஊராட்சி தலைவர்கள் மற்றும் அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கூட்டம் நடைபெறுவதை கண்காணிக்க ஒன்றிய அளவில் மண்டல அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர் என கலெக்டர் சந்திரகலா தெரிவித்துள்ளார்.
News January 22, 2026
ராணிப்பேட்டையில் தூக்கி வீசப்பட்டு பலி!

அரக்கோணம் ரெயில்வே போலீஸ் எல்லைக்கு உட்பட்ட திருத்தணி – பொன்பாடி ரெயில் நிலையங்களுக்கு இடையில் 40 வயது மதிக்கத்தக்க நபர் தண்டவாளத்தை கடக்க முயன்றுள்ளார். அப்போது ரெயிலில் அடிபட்டு பரிதாபமாக இறந்தார். இதையடுத்து அரக்கோணம் ரெயில்வே போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என விசாரித்து வருகின்றனர்.
News January 22, 2026
ராணிப்பேட்டை: தந்தைக்கு எமனான மகன்!

சோளிங்கர் அருகே ஐப்பேடு கிராமத்தை சேர்ந்தவர் நரசிம்மன் (70). இவருக்கு 2 மகன் மற்றும் 1 மகள் உள்ளனர். இதில், மூத்த மகன் செல்வம் (40) தனக்கு சேர வேண்டிய சொத்தை பிரித்து தருமாறு நேற்று (ஜன.21) கேட்டுள்ளார். இதில் இருவருக்கும் ஏற்பட்ட தகராறில், செல்வம் தந்தையை ஓங்கி கன்னத்தில் அறைந்தார். இதில் நரசிம்மன் இறந்தார். சோளிங்கர் போலீசார் வழக்கு பதிவு செய்து, செல்வத்தை கைது செய்தனர்.


