News April 3, 2024
வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி தொடக்கம்

புதுக்கோட்டை நகராட்சி அடப்பன் வயல் பகுதியில் திருச்சி எம்பி தொகுதிக்குட்பட்ட புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி வாக்காளர்களுக்கு வீட்டிற்கு நேரடியாக சென்று வாக்காளர் தகவல் சீட்டு (பூத் சிலிப்) வழங்கும் பணியினை மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா தொடங்கி வைத்தார். இதில் புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் ஐஸ்வர்யா, மக்கள் தொடர்பு அலுவலர் பிரேமலதா, வட்டாட்சியர் பரணி, ஆணையர் ஷியாமளா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Similar News
News April 7, 2025
புதுகை மாவட்டத்தில் அங்கன்வாடியில் வேலை

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடி மையங்களில் டீச்சர் (281), உதவியாளர் (196) ஆகிய பணியிடங்களை நிரப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, விண்ணப்பங்களை www.icds.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து 10 வேலை நாட்ளுக்குள் விண்ணப்பிக்க வேண்டும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை காலியாக உள்ள குழந்தைகள் மையத்தில் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் அருணா அறிவித்துள்ளார். (SHARE பண்ணுங்க)
News April 7, 2025
புதுகை மாவட்ட அங்கன்வாடி பணி : தமிழக அரசு அறிவிப்பு

புதுகை அங்கன்வாடி
டீச்சர் 281 – பேர்.
உதவியாளர் – 196 பேர் பணியிடத்திற்கு
தமிழக அரசு அறிவிப்பு
வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பங்களை www.icds.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துக் கொள்ளுமாறு தெரிவித்துக்கொள்ளப்படுகிறதுஇப்பணிகளுக்கென 10 வேலை நாட்ளுக்குள் விண்ணப்பிக்க வேண்டும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை காலியாக உள்ள குழந்தைகள் மையத்தில் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் அறிவித்துள்ளார்.
News April 7, 2025
புதுக்கோட்டையில் இன்று உள்ளூர் விடுமுறை

புதுக்கோட்டை மாவட்டம் புகழ்பெற்ற நார்த்தாமலை ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் தேர்த்திருவிழா இன்று (ஏப்.07) நடைபெற உள்ளது. இதனால் புதுக்கோட்டை மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகை புரிய உள்ளனர். இதனை முன்னிட்டு இன்று புதுக்கோட்டை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை என கலெக்டர் மு. அருணா அறிவித்துள்ளார். (SHARE பண்ணுங்க)