News April 24, 2024

வாக்களிக்க வந்தவர்கள் திரும்ப முடியாமல் கடும் அவதி

image

மக்களவைத் தேர்தலுக்கு வாக்களிக்க பெங்களூருவிலிருந்து தமிழகத்திலுள்ள சொந்த ஊருக்கு வந்தவர்கள் கடந்த 3 நாளாக போதுமான பஸ்கள் இல்லாததால் அவதிப்படுகின்றனர். தர்மபுரியில் பஸ்கள் நிரம்பிவிடுவதால் பாலக்கோடு, ஜிட்டாண்டஅள்ளி, ராயக்கோட்டை போன்ற பஸ் நிறுத்தங்களில் நிறைய பயணிகள் காத்து நிற்கின்றனர். எனவே தர்மபுரி, பாலக்கோடு, ஓசூர் போன்ற டிப்போக்களிலிருந்து கூடுதல் பஸ்களை இயக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Similar News

News January 28, 2026

கிருஷ்ணகிரி: ரேஷன் ஊழியர்கள் மீது புகார் செய்வது எப்படி?

image

ரேஷன் கடைகளில் பொருட்களை சரியாக வழங்காமல் இருப்பது, சோப்பு, பிஸ்கஸ்ட் போன்ற பொருட்களை கட்டாயப்படுத்தி வாங்க சொல்வது போன்ற செயல்களில் ரேஷன் கடை ஊழியர்கள் ஈடுபட்டால் 1800 425 5901 என்ற TOLL FREE எண் (அ) கிருஷ்ணகிரி மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவகத்தில் புகார் செய்யலாம். உங்க நண்பர்களுக்கும் ஷேர் பண்ணி அவங்களுக்கும் தெரியப்படுத்துங்க.

News January 28, 2026

கிருஷ்ணகிரி காவல்துறை முக்கிய அறிவிப்பு!

image

கிருஷ்ணகிரி மாவட்டக் காவல்துறை சார்பில் தினம் ஒரு விழிப்புணர்வு செய்தி பதிவிடப்பட்டது வருகிறது. இதன்படி பங்குச் சந்தையில் முதலீடு செய்தால் இரண்டு மடங்கு லாபம் தருவதாகக் கூறி வரும் போலி அழைப்புகளை நம்ப வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இது குறித்த சைபர் நிதி மோசடி புகார்களுக்கு 1930 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம் என அறிவிப்பு வெளியாகி உள்ளது.

News January 28, 2026

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்!

image

கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம் மற்றும் வேலைவாய்ப்பு அலுவலகம் இணைந்து நடத்தும் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்புத் தனியார் வேலைவாய்ப்பு முகாம் வரும் ஜனவரி 30-ஆம் தேதி நடைபெற உள்ளது. கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறும் இந்த முகாமில் டைட்டன் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்கள் பங்கேற்க உள்ளனர். இதில் 10-ஆம் வகுப்பு முதல் பட்டதாரிகள் வரை அனைவரும் பங்கேற்கலாம்.

error: Content is protected !!