News December 4, 2024

வாகன போக்குவரத்து இயல்பு நிலைக்கு திரும்பியது

image

தொடர் கனமழை காரணமாக சேலம், கந்தம்பட்டி பைபாஸ் தேசிய நெடுஞ்சாலை திருமணிமுத்தாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினை சீர்செய்யும் பணியினை நேற்று (டிச.3) சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன், நேரில் ஆய்வு மேற்கொண்டு துரிதப்படுத்தியதன் அடிப்படையில் சீரமைப்புப் பணிகள் முடிவுற்று நேற்று மாலையே வாகன போக்குவரத்துக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. தற்போது அச்சாலையில் வாகன போக்குவரத்து இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது.

Similar News

News July 9, 2025

திட்டத்திற்கான தகுதிகள் என்ன?

image

▶️அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்கள் திருமண உதவி திட்டம் – 1 இன் கீழ் உதவித்தொகை (ரூ.25,000) பெற கல்வித் தகுதி தேவையில்லை ▶️ திட்டம் – 2 இன் கீழ் உதவித்தொகை (ரூ.50,000) பெற டிப்ளமோ அல்லது பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும் ▶️ விண்ணப்பதாரர் பெற்றோர்களால் கைவிடப்பட்ட அல்லது பெற்றோர்களை இழந்தவராக இருக்க வேண்டும் ▶️ திருமணத்திற்கு 40 நாட்களுக்கு முன்பாகவே விண்ணப்பிக்க வேண்டும்.

News July 9, 2025

பொது வேலைநிறுத்தம்- ஷேர் ஆட்டோக்கள் இயங்கவில்லை

image

மத்திய அரசின் தொழிலாளர்கள் விரோதப் போக்கைக் கண்டித்தும், 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று (ஜூலை 09) தொழிற்சங்கங்கள் சார்பில் பொது வேலைநிறுத்தம் நடைபெற்று வரும் நிலையில் சேலம் மத்திய பேருந்து நிலையத்தில் ஷேர் ஆட்டோக்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஷேர் ஆட்டோக்கள் இயங்காததால் பேருந்து பயணிகள், பொதுமக்கள் அவதியடைந்தனர்.

News July 9, 2025

சேலம்-திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்

image

ஆனி பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் சேலம் கோட்டம் சார்பில் இன்று (ஜூலை 09) முதல் ஜூலை 11- ஆம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சேலம் மத்திய பேருந்து நிலையம், ஆத்தூர் பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களில் இருந்து பயணிகளின் எண்ணிக்கை, தேவைக்கேற்ப சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!