News March 14, 2025

வாகன சோதனையை தீவிரப்படுத்த வேண்டும்: கலெக்டர்

image

திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் தலைமையில், மது கடத்தல் மற்றும் போதைப்பொருட்கள் ஒழிப்பு தொடர்பான ஆய்வு கூட்டம் நேற்று (மார்.13) நடந்தது. இதில், வாகன சோதனையை தீவிரப்படுத்தவும், சந்து கடைகள் மற்றும் கல்வி மையங்களில் ஆய்வு மேற்கொள்ளவும் அறிவுறுத்தினார். மேலும், குற்றச்சம்பங்களில் ஈடுபடும் வாகனங்களின் உரிமத்தை ரத்து செய்யவும் உத்தரவிட்டார். கலால், வருவாய் அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Similar News

News August 9, 2025

திருவள்ளூர் ரேஷன் கார்டுதாரர்கள் கவனத்திற்கு

image

திருவள்ளூர் மாவட்டத்தில் 9 வட்டங்களிலும், குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம் தொடர்பான குறைதீர் முகாம் இன்று அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களிலும் நடைபெறவுள்ளது. மேலும் குடும்ப அட்டையில் திருத்தங்கள், புகைப்படம் பதிவு செய்தல் தொடர்பான விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் அளித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். ஷேர் பண்ணுங்க. <<17348875>>தொடர்ச்சி<<>>

News August 9, 2025

திருவள்ளூர் ரேஷன் கார்டுதாரர்கள் கவனத்திற்கு

image

மேலும் தேசிய உணவுப்பாதுகாப்பு சட்டம் மூலம் பயன்பெறும் முன்னுரிமை குடும்ப அட்டைகள், அந்த்யோதய அன்ன குடும்ப அட்டைகள், குடும்ப அட்டை தாரர்கள் குடும்ப அட்டையில் உள்ள அனைவரும் தங்களது விரல் ரேகையை பதிவு செய்திருக்க வேண்டும். இதுவரை பதிவு செய்யாதவர்கள் அருகில் உள்ள ரேஷன் கடைகளில் வரும் 25, 26 தேதிகளில் பதிவு செய்து கொள்ளலாம் என ஆட்சியர் தெரிவித்தள்ளார். ஷேர் பண்ணுங்க

News August 9, 2025

திருவள்ளூரில் புறநகர் ரயில்கள் ரத்து

image

பொன்னேரி கவரப்பேட்டை இடையே பராமரிப்பு பணிகள் காரணமாக 17 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதன்படி கடற்கரை- கும்மிடிப்பூண்டி (09.40, 12.40 மணி), மூர் மார்க்கெட் காம்ப்ளக்ஸ் சூலுருபேட்டை(10.15, 12.10,1.05 மணி) , மூர் மார்க்கெட் காம்ப்ளக்ஸ் கும்மிடிபூண்டி( 10.35, 11.35 மணி), சூலூர்பேட்டை – நெல்லூர் (3.50 மணி), மூர் மார்க்கெட் வளாகம் ஆவடி(11.40 மணி) <<17348126>>தொடர்ச்சி<<>>

error: Content is protected !!