News March 26, 2026
வாகன சோதனையில் ரூ.44 லட்சம் ரொக்கம் பறிமுதல்

சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதல் திருச்சி மாவட்டத்தில் உள்ள ஒன்பது சட்டமன்றத் தொகுதிகளில் பறக்கும் படையினர் மற்றும் வாகன சோதனையில் 44 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் உறிய ஆவணங்கள் காட்டியதைத் தொடர்ந்து 21 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணம் திரும்பி ஒப்படைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள பணம் அரசுக் கருவூலத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.
Similar News
News March 31, 2026
திருச்சியில் நடிகை விந்தியா பிரச்சாரம் அறிவிப்பு

அதிமுக கொள்கை பரப்பு இணைச் செயலாளரும், நடிகையுமான விந்தியா திருச்சியில் அடுத்த மாதம் பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறார். அதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில் வரும் ஏப்ரல் 7-ம் தேதி மாலை 5 மணி முதல் 9 மணி வரை ஸ்ரீரங்கம், மணச்சநல்லூர், முசிறி, துறையூர் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
News March 31, 2026
BREAKING: திருச்சியில் திமுக கவுன்சிலர் வெட்டிக்கொலை

திருவெறும்பூர் அடுத்த கூத்தைப்பார் பேரூராட்சி 11-வது வார்டு திமுக கவுன்சிலரும், திமுக பேரூர் கழக இளைஞரணி செயலாளராகவும் இருந்து வருபவர் ரஞ்சித்குமார் (38). இந்நிலையில் இவர் நேற்று இரவு வீட்டிற்கு டூவீலரில் வந்து கொண்டிருந்தபோது மர்ம நபர்களால் அரிவாளால் சரமாரியாக வெட்டப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். நவல்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.