News April 12, 2024

வாகன சோதனையில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல்

image

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த பக்கிரிப்பாளையம் புறவழிச்சாலை சந்திப்பில் இன்று காலை 5 மணி அளவில் தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பெங்களூர் நந்தி லேஅவுட் பகுதியைச் சேர்ந்த மோகன் சாரி என்பவரிடம் உரிய ஆவணம் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.1,17,900 யை அதிகாரிகள் பறிமுதல் செய்து தேர்தல் அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டது.

Similar News

News February 16, 2026

தி.மலை: கேஸ் மானியம் ரூ.300 வேண்டுமா?

image

தி,மலை மக்களே, கேஸ் மானியம் ரூ.300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர வேண்டுமா? அதற்கு <>இங்கு க்ளிக் <<>>செய்து எந்த நிறுவனம் (Bharatgas, indane, HP) என்பதை தேர்ந்தெடுங்க. பின்னர் நுகர்வோர் எண், வங்கி எண், IFSC கோட், ஆதார் ஆகிய விவரங்களை உள்ளிட்டு, OTP மூலம் இணைப்பை உறுதி செய்தால் போதும், மாதந்தோறும் உங்க வங்கி கணக்குக்கு கேஸ் மானியம் வந்துவிடும். இதை மற்றவர்கள் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க

News February 16, 2026

தி.மலையில் அதிரடி கைது!

image

வந்தவாசி வடக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளா் ஆறுமுகம் தலைமையிலான போலீஸாா் சளுக்கை கிராமம் வழியாக ரோந்து சென்றனா். அப்போது இங்கு நின்று கொண்டிருந்த சளுக்கை கிராமத்தைச் சோ்ந்த வசந்தகுமாா் (19) போலீஸை கண்டதும் ஒட்டம் பிடித்தார். அவரை பிடித்து விசாரித்தில் 25 கிராம் கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரியவந்தது. வசந்தகுமாா் கைது செய்த போலீஸ் அவரின் பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.

News February 16, 2026

தி.மலை அருகே மாணவர்கள் துடித்து துடித்து பலி

image

தி.மலை மாவட்டம் வந்தவாசி அருகே வீடி இடிந்து விழுந்ததில் அபினேஷ் மற்றும் முகேஷ் ஆகிய இரு சகோதரர்கள் உயிரிழந்தனர். இளங்காட்டில் உள்ள தாத்தா வீட்டிற்கு சென்றுள்ளனர். அப்போது தாத்தாவின் வீட்டு சீரமைக்கப்பட்டு வந்த நிலையில், எதிர்பாராத விதமாக இரு சகோதர்கள் மீது சுவர்கள் இடி விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

error: Content is protected !!