News November 17, 2024
வாகன ஓட்டுநர் மர்மமான முறையில் உயிரிழப்பு

ஆளவந்தநல்லூரை சேர்ந்த மனோகா் சொந்தமாக வாகனம் ஓட்டி தொழில் செய்யும் நிலையில், நேற்று சவாரி இருப்பதாகக் கூறி வாகனத்துடன் வெளியில் சென்றவர், நள்ளிரவில் சங்கா் நகா் அருகே, தனது வாகனத்துக்குள் தலையில் அடிபட்ட நிலையில் மா்மமான முறையில் இறந்து கிடந்தாா். இதையறிந்த சோமரசம்பேட்டை போலீஸாா் மனோகரின் சடலத்தை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனா்.
Similar News
News March 1, 2026
திருச்சி: +2 பொதுத்தேர்வு எழுதவுள்ள 31,215 பேர்

தமிழகம் முழுவதும் +2 பொதுத்தேர்வு நாளை (மார்ச் 2) தொடங்க உள்ளது. இத்தேர்வினை திருச்சி மாவட்டத்தில் 134 தேர்வு மையங்களில், 258 பள்ளிகளைச் சேர்ந்த 14,731 மாணவர்கள், 16,484 மாணவிகள் என மொத்தம் 31,215 பேர் எழுத உள்ளனர். மேலும் தனித்தேர்வர்களாக 510 ஆண்கள், 457 பெண்கள் என 967 பேர் எழுத உள்ளனர். தேர்வு நல்ல முறையில் நடைபெறுவதை உறுதி செய்ய 260 பறக்கும் படையினர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
News March 1, 2026
திருச்சி: மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமானங்கள் ரத்து

இஸ்ரேல் – ஈரான் போர் பதற்றம் காரணமாக, திருச்சி விமான நிலையத்திலிருந்து மத்திய கிழக்கு வளைகுடா நாடுகளுக்கு இயக்கப்படும் விமான சேவைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதற்கு ஏற்ப பயணிகள் தங்களது பயணத்திட்டத்தை மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டும். போர் சூழல் குறித்து அடுத்த அறிவிப்பு வரும் வரை இந்த ரத்து நடவடிக்கை தொடரும் என திருச்சி சர்வதேச விமான நிலையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News March 1, 2026
திருச்சி: பெண்களுக்கு ரூ.3 லட்சம்.. APPLY NOW!

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ.3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ.1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற இங்கே <


