News December 19, 2024
வாகனம் ஓட்டும் பொழுது செல்போனை தவிர்க்க அறிவுரை

கோரம்பள்ளத்தில் உள்ள தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தின் சார்பில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. அந்த வகையில், “இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் வாகனம் ஓட்டும் போது செல்போன் பேசுவதை தவிர்க்க வேண்டும்; 4 சக்கர வாகன ஓட்டிகள் சீட் பெல்ட் அணிய வேண்டும்” என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Similar News
News March 3, 2026
தூத்துக்குடி: ஆட்டோ கவிழ்ந்து சம்பவ இடத்திலேயே பலி

ஆறுமுகநேரி பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் செந்தில்குமார் (54) ஆட்டோவில் சவாரியாக நாசரேத்தில் உள்ள மருத்துவமனைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது மேல புதுக்குடி அருகே சென்றபோது ஆட்டோ கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் செந்தில்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
News March 3, 2026
தூத்துக்குடி: 2 பேர் மீது பாய்ந்த குண்டாஸ்!

தூத்துக்குடி சிப்காட் காவல் நிலைய பகுதியில் நடந்த கொலை முயற்சி வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளியான சுந்தரபாண்டி (21) மற்றும் தருவைகுளம் பகுதியில் நடந்த கஞ்சா கடத்தல் வழக்கில் தொடர்புடைய கட்ட முருகன் (31) ஆகிய இருவர் மீது போலீசார் வழக்கு பதிந்து குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து இருவரையும் போலீசார் கைது செய்து பாளையங்கோட்டை தடுப்பு காவல் சிறையில் அடைத்தனர்.
News March 3, 2026
குண்டர் சட்டத்தின் கீழ் இரண்டு பேர் கைது

தூத்துக்குடி சிப்காட் காவல் நிலைய பகுதியில் நடந்த கொலை முயற்சி வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளியான சுந்தரபாண்டி (21) மற்றும் தருவைகுளம் பகுதியில் நடந்த கஞ்சா கடத்தல் வழக்கில் தொடர்புடைய கட்ட முருகன் (31) ஆகிய இருவர் மீது போலீசார் வழக்கு பதிந்து குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்தனர். தொடர்ந்து இருவரையும் போலீசார் கைது செய்து பாளையங்கோட்டை தடுப்பு காவல் சிறையில் அடைத்தனர்.


