News May 29, 2024
வழிகாட்டுதல் நிகழ்ச்சியில் ஆலோசனை வழங்கிய ஆட்சியர்

கடலூர் மாவட்டத்தில் உள்ள இலங்கை தமிழர்கள் முகாம்களில் 10, 11 மற்றும்
12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கடலூர் மாவட்ட அரசு மாதிரிப் பள்ளியில் நடைபெற்ற உயர்க்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண் தம்புராஜ் உயர்கல்வியின் முக்கியத்துவம் குறித்து பல்வேறு ஆலோசனைகள் மற்றும் அறிவுரைகளை இன்று வழங்கினார்.
Similar News
News January 28, 2026
கடலூர்: பட்டாவில் பெயர் மாற்ற வேண்டுமா?

கடலூர் மக்களே பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் அல்லது புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகமாகியுள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களுடன் eservices.tn.gov.in என்ற இணையதளம், இ-சேவை மையங்கள் அல்லது TN nilam citizen portal தளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். இதன் மூலம் அலைச்சல் இல்லாமல் பட்டாவில் எளிதாக பெயர் மாற்றம் செய்து கொள்ளலாம்.. இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
News January 28, 2026
கடலூர்: துப்புரவு பணியாளருக்கு நேர்ந்த சோகம்

சிதம்பரம் அடுத்த கவரப்பட்டை சேர்ந்தவர் ஜெகதீசன் (47). துப்புரவு பணியாளரான இவர், நேற்று வீட்டிற்கு நடந்து சென்றபோது அவரது காலில் விஷபூச்சி கடித்ததாக கூறப்படுகிறது. சிறிது நேரத்தில் அவர் மயங்கி கீழே விழுந்தார். உடனே அக்கம் பக்கத்தினர் அவரை கவரப்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்ற போது வழியிலேயே உயிரிழந்தார். இதுகுறித்து அண்ணாமலை நகர் போலீசார் வழக்குப்பதிந்து, விசாரிக்கின்றனர்.
News January 28, 2026
கடலூர்: மின்சாரம் தாக்கி பலி

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ள செவ்வேரி கிராமத்தைச் சேர்ந்த நடராஜன் என்பவரது வயலில், நேற்று (ஜன.27) அதே பகுதியை சேர்ந்த திருஞானம் (52) என்பவருக்கு சொந்தமான பசுமாடு மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது அங்கு அறுந்து கிடந்த மின்கம்பியை எதிர்பாராதவிதமாக மாடு மிதித்த போது, மின்சாரம் தாக்கி மாடு துடித்து துடித்து உயிரிழந்தது.


