News December 10, 2024

வழக்கறிஞர் மீது மர்ம கும்பல் வெறிச்செயல்

image

சென்னை சைதாப்பேட்டை நீதிமன்ற வழக்கறிஞர் மதன் என்பவரை மர்ம கும்பல் வெட்டியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இரு தரப்புக்குள் போதையில் நடந்த சண்டையில் வெட்டியதாக தகவல் வெளியாகியுள்ளது. வழக்கறிஞர் மதனை வெட்டி விட்டு தப்பியோடிய கும்பலை கோட்டூர்புரம் போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர். படுகாயம் அடைந்த வழக்கறிஞர் மதன், சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதி அனுதிக்கப்பட்டுள்ளார்.

Similar News

News August 29, 2025

சென்னையில் இன்று இரவு ரோந்து பணி விவரம்

image

சென்னையில் இன்று (ஆக.29) இரவு 11 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வரியாக உள்ளது. மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளன.

News August 29, 2025

மத்திய அமைச்சரை வரவேற்ற பாஜக தலைவர்

image

சென்னை விமான நிலையத்தில் இன்று (ஆக.29) பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக வந்துள்ள மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை, தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வரவேற்றார்.
அப்போது தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் இருந்தார். இந்நிகழ்வில் பாஜக மாநில, மாவட்ட நிர்வாகிகள், உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு வரவேற்றனர்.

News August 29, 2025

ஸ்தம்பித்த பெசன்ட் நகர்

image

பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி தேவாலயம் பொன்விழா இன்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. மேலும், வரும் செப்.8-ம் தேதி வரை திருவிழா நடைபெறவுள்ளது. இந்நிலையில் இன்று மாலை அப்பகுதியில் பெரும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதனால், அப்பகுதியில் கடும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும், பாதுகாப்பு பணிக்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

error: Content is protected !!