News May 12, 2024
வழக்கறிஞர் கொலையில் ஆறு பேர் கைது

தூத்துக்குடி அண்ணா நகரில் நேற்று நள்ளிரவில் செந்தில் ஆறுமுகம் என்ற வழக்கறிஞர் மர்ம கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக மத்திய பாகம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் சொத்து தகராறில் செந்தில் ஆறுமுகத்தை வெட்டி கொலை செய்ததாக அவரது தங்கை கணவர் கோபிநாத் உட்பட ஆறு பேரை போலீசார் சற்று முன் கைது செய்துள்ளனர். மேலும் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News July 9, 2025
தூத்துக்குடி தண்டவாளத்தில் ஒருவர் உயிரிழப்பு

தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி ரயில் நிலையத்திற்கும், நாசரேத் ரயில் நிலையத்திற்கும் இடைப்பட்ட ரயில் தண்டவாளப் பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் உடல் ஒன்று உடல் சிதைந்த நிலையில் காணப்படுவதாக ரயில்வே போலீசார் மற்றும் நாசரேத் போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. அதன் பெயரில் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி போலீசார் இறந்தவர் யார்? என விசாரித்து வருகின்றனர்.
News July 8, 2025
தாலி பாக்கியம் நிலைக்க இங்கே வழிபடுங்கள்

தசராவிற்கு புகழ்பெற்ற குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவிலுக்கு அருகே, வட கரூரில் உள்ள காரைக்கால் அம்மையார் கல் மண்டப கோவில் அமைந்துள்ளது. அம்மையார் ஈசனிடம் பேய் உருவம் வேண்டியது இந்த ஸ்தலத்தில் என்பது ஐதீகம். காரைக்காலில் நடப்பது போல இங்கும் ஆனி மாதம் நடைபெறும்ஆனி மாத மாங்கனி திருவிழாவில் பங்கேற்பவர்களுக்கு குழந்தை பாக்கியமும், தாலி பாக்கியம் நிலைத்திருக்கும் என நம்பப்படுகிறது.
News July 8, 2025
சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுகள் பெற விண்ணப்பிக்கலாம் ஆட்சியர் தகவல்!

தூத்துக்குடி மாவட்டத்தில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தையும், சமூக ஒற்றுமையினையும் கடைபிடிக்கும் ஊராட்சிகள் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுகள் பெற உரிய படிவத்தினை தூத்துக்குடி மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் பெற்று ஜூலை-14-க்குள் விண்ணப்பிக்குமாறு மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தெரிவித்துள்ளார்