News December 31, 2024
வள்ளுவரை நினைவுகூர்ந்த அமைச்சர்!

குமரி வரலாற்று கூடத்தில் உள்ள, வள்ளுவர் மரச்சிலையுடன், காங்கேயம் எம்எல்ஏ-வும், செய்தித்துறை அமைச்சருமான மு.பெ சாமிநாதன் புகைபடம் எடுத்து கொண்டார். மேலும் இச்சிலை கடல் நடுவில் அமைக்கப்பட்ட 133 அடி உயர திருவள்ளுவர் கிரானைட் சிலையின் தலைமை வடிவமைப்பாளர் டாக்டர் வி. கணபதி ஸ்தபதியால், 2006-ஆம் ஆண்டு, வரலாற்று கூடத்தில் நிறுவப்பட்டது என, நினைவு கூர்ந்தார்.
Similar News
News August 22, 2025
திருப்பூர் இரவு ரோந்து காவலர் விபரம்!

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இன்று 22.08.2025 இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். காங்கேயம், தாராபுரம், உடுமலை, அவினாசி, பல்லடம், ஊதியூர், செய்யூர், குன்னத்தூர், பெருமாநல்லூர், அவினாசிபாளையம் ஆகிய பகுதியில் உள்ள காவல்துறையின் இரவு ரோந்து பணிபுபவரம் மாவட்ட காவல்துறையினரால் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் அவசர உதவிக்கு 108 ஐ அழைக்கவும்.
News August 22, 2025
திருப்பூர் மக்களே முற்றிலும் இலவசம்!

திருப்பூரில் கனரா வங்கி கிராமப்புற சுய வேலைய வாய்ப்பு பயிற்சி நிலையத்தின் சார்பாக, காளான் வளர்ப்பு (ம) அதன் மதிப்புக்கூட்டு பொருட்கள் தயாரிப்பு பயிற்சி வழங்கப்படுகிறது. இதில் சூப், பிரியாணி, பிஸ்கட் தயாரிப்பு உள்ளிட்ட பயிற்சிகளும் வழங்கப்படுகிறது. பயிற்சி, சீருடை, உணவு, அனைத்தும் இலவசம். பயிற்சி முடிவில் அரசு சான்றிதழும் வழங்கப்படும். மேலும் விபரங்களுக்கு 9489043923 என்ற எண்னை அழைக்கவும். SHAREit
News August 22, 2025
திருப்பூரில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு முகாம்

திருப்பூர் மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்தில் மாதம்தோறும் வெள்ளிக்கிழமை ஒருமுறை மாற்றுத்திறனாளிகள் முகாம் நடைபெறுவது வழக்கமாக வந்தது. மூன்று மாத காலமாக மாற்றுத்திறனாளிகள் முகாம் நடைபெறாததால், இன்று(ஆக.22) திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஏழு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் இருந்து மாற்றுத்திறனாளிகள் பெரும் திரளாக முகாமில் கலந்து கொண்டனர்.