News July 30, 2024
வள்ளிமலை கோவிலில் தெப்பல் உற்சவம்

காட்பாடி தாலுகா வள்ளிமலையில் பிரசித்தி பெற்ற வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆடிக் கிருத்திகை விழா நேற்று நடந்தது. இதை முன்னிட்டு மாலை 6 மணி அளவில் தெப்பக்குளத்தில் தெப்பல் உற்சவம் நடந்தது. மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் உற்சவர் 5 சுற்றுகள் உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் அப்பகுதியை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
Similar News
News August 9, 2025
வேலூர் ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு…

வேலூர் மாவட்டத்தில், ரேஷன் கார்டு திருத்தம் செய்யும் சிறப்பு முகாம் இன்று (ஆகஸ்ட் 9) நடைபெறுகிறது. வேலூரில் மேல்வல்லம், காட்பாடியில் உள்ளி புதூர், அணைக்கட்டில் கீலாச்சூர் மற்றும் வெப்பந்தல், குடியாத்தத்தில் ராமாலை மற்றும் காந்தி கணவாய், கே.வி.குப்பத்தில் காளம்பட்டு, பேரணம்பட்டில் பரவக்கல் ஆகிய பகுதிகளில் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை முகாம் நடைபெறும். ஷேர் பண்ணுங்க <<17348849>>தொடர்ச்சி<<>>
News August 9, 2025
வேலூர் ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு…

ரேஷன் கார்டு திருத்த முகாமில், ரேஷன் கார்டில் உறுப்பினர் சேர்க்கை / நீக்கம், பெயர் மாற்றம், முகவரி மாற்றம், குடும்ப தலைவர் மாற்றம், புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்க போன்ற பல்வேறு சேவைகளை செய்யலாம். முகாம்கள் அந்தந்த வட்டங்களில் எங்கு நடைபெறுகிறது என்பதை அதிகாரிகளை (வேலூர் – 0416-2252586, 0416-2220519, குடியாத்தம் – 04171-221177, காட்பாடி – 0416-2244647) தொடர்பு கொண்டு கேளுங்கள். ஷேர் பண்ணுங்க
News August 9, 2025
வேலூரை வெளுத்து வாங்கும் கனமழை

வேலூரில் பெய்து வரும் தொடர் மழையால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். ஏரி, குளங்களுக்கு நீர்வரத்து தொடங்கியுள்ளது. அதிகபட்சமாக அம்முண்டியில் 80.20 மி.மீ மழை பதிவாகி உள்ளது. ஒடுகத்தூர் 11, குடியாத்தம் 38, மேல்ஆலத்தூர் 27.40, மோர்தானா அணை 25, ராஜாதோப்பு அணை 25, வட விரிஞ்சிபுரம் 47, காட்பாடி 61, பொன்னை 122, பேரணாம்பட்டு 4.40, கலெக்டர் அலுவலகம் 41.70, வேலூர் தாலுகா 36.30 பதிவாகியுள்ளது.