News January 14, 2026
வள்ளலார் பொன்மொழிகள்

*சோதனைகள் தான் ஒரு மனிதனுக்கு அவனை அறிமுகப்படுத்துகின்றன. *புண்ணியமும், பாவமும் மனம், சொல், செயல் ஆகிய வழிகளில் நம்மை வந்தடைகின்றன. *எல்லா உயிர்களிடத்திலும் கடவுள் வியாபித்திருக்கிறார் என்று அறிதலே கடவுள் பக்தியாகும். *உண்மையைச் சொல் அது உனது மரியாதையை பாதுகாக்கும். *மனதை அடக்க நினைத்தால் அடங்காது. அதை அறிய நினைத்தால் அடங்கும்.
Similar News
News April 4, 2026
தேர்தலுக்கு பிறகு தலைவர் பதவியில் இருக்க மாட்டேன்: KS

சட்டப்பேரவை தேர்தலுக்கு பிறகு தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியில் இருந்து விலகிவிடுவேன் என செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். மாநில தலைவராக 2 ஆண்டுகள் பணி செய்துவிட்ட நிலையில், பதவியில் இருந்து தன்னை விடுவிக்கும்படி ராகுலிடம் கேட்டுக்கொண்டதாக அவர் கூறியுள்ளார். மேலும், இனி 24 மணி நேரமும் ஸ்ரீபெரும்புதூர் தொகுதி மக்களுடன் செலவிடப்போகிறேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.<<-se>>#TNElection2026<<>>
News April 4, 2026
IPL : இன்று MI Vs DC

IPL-ல், இன்று MI, DC அணிகள் டெல்லியில் மோதுகின்றன. இவ்விரு அணிகளும் 37 முறை நேருக்கு நேர் மோதியதில் 21 முறை MI, 16 முறை DC வெற்றி பெற்றுள்ளன. பந்துவீச்சில் இரு அணிகளும் சமபலத்துடன் இருந்தாலும், பேட்டிங்கில் MI அணியே வலுவாக காணப்படுகிறது. பேட்டிங்கிற்கு சாதகமான டெல்லி ஆடுகளத்தில் MI வீரர்களின் அதிரடியை DC பவுலர்கள் கட்டுப்படுத்துவதை பொறுத்தே வெற்றி தோல்வி அமையும். யார் ஜெயிக்க வாய்ப்பு?
News April 4, 2026
சர்ச்சை ஆடியோ.. ஆ.ராசா Vs மாரிதாஸ்

ஆ.ராசா MP பேசியதாக யூடியூபர் மாரிதாஸ் வெளியிட்ட <<19548289>>ஆடியோ<<>> அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது. அதை பிரசாரத்தில் சுட்டிக்காட்டி பேசிய EPS, கருணாநிதியை ஸ்டாலின் கைதி போல நடத்தியிருப்பதாக தெரிவித்தார். இதையடுத்து போலியான ஆடியோவை வெளியிட்டதற்கு மாரிதாஸ் மன்னிப்பு கேட்க வேண்டும் என ஆ.ராசா வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். ஆனால், ஆதாரம் இருப்பதால் மன்னிப்பு கேட்க மாட்டேன் என மாரிதாஸ் பதிலளித்துள்ளார்.


