News April 3, 2024
வள்ளலார் சர்வதேச மையம்: அரசு பதிலளிக்க உத்தரவு
சத்திய ஞானசபை முன் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்க தடை விதிக்க கோரி பாஜக நிர்வாகி வினோத் ராகவேந்திரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இவ்வழக்கு விசாரணை இன்று நடந்த நிலையில், வள்ளலார் சர்வதேச மையத்தில் என்னென்ன வசதிகள் செய்யப்பட உள்ளன என்பது குறித்து விரிவான தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. இவ்வழக்கு ஏப்.,24ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
Similar News
News November 20, 2024
சென்னை மலர் கண்காட்சிக்காக தயாராகும் மலர் தொட்டிகள்
சென்னையில் நடக்கும் மலர் கண்காட்சிக்காக தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு பகுதிகளில் உள்ள தோட்டக்கலைத்துறை பூங்காவிலிருந்து மலர் செடிகள் தயார் செய்யப்பட்டு சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டுகிறது. ஊட்டியில் தாவரவியல் பூங்காவிலும் இதற்காக மலர் தொட்டிகள் தயார் செய்யும் பணி துவக்கப்பட்டுள்ளது. நீலகிரியில் ஒரு லட்சம் மலர் தொட்டிகள் தயாரிக்கும் பணி தீவிரமாக தற்போது நடைபெறுகிறது.
News November 20, 2024
சென்னையில் இன்று இரவு ரோந்து பணி விவரம்
சென்னையில் இன்று இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
News November 19, 2024
சென்னையில் ஆண்களுக்கான நவீன கருத்தடை முகாம்
சென்னை மாநகராட்சி சார்பில் ஆண்களுக்கான நவீன குடும்பநல கருத்தடை சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாம் நவம்பர் 28 முதல் டிசம்பர் 4ஆம் தேதி வரை நடைபெறும். கருத்தடை செய்து கொள்ளும் நபர்களுக்கு அரசு ஊக்கத் தொகையாக ரூ.1,100 மற்றும் அழைத்து வரும் நபர்களுக்கு ரூ.200 வழங்கப்படும் என மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.