News January 2, 2026
வளத்தூர் நலம் காக்கும் ஸ்டாலின் முகாம் கலெக்டர் தகவல்

வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஒன்றியத்துக்கு உட்பட்ட வளத்தூர் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் நாளை (ஜனவரி 03) நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம் காலை 8 மணி முதல் 4 மணி வரை நடைபெற உள்ளது. இதில் 17 சிறப்பு மருத்துவ நிபுணர்கள் அடங்கிய குழுவினர் கலந்து கொள்ள உள்ளனர். எனவே பொதுமக்கள் இந்த முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என கலெக்டர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார்.
Similar News
News January 7, 2026
வேலூர்: பொங்கல் பரிசு ரூ.3000 – CHECK பண்ணுங்க!

வேலூர் மக்களே, பொங்கல் பரிசாக ரூ.3000, பச்சரிசி, வெல்லம் மற்றும் நீளகரும்பு தமிழக அரசு வழங்க உள்ளது. உங்களுக்கு ரூ.3000 இருக்கா இல்லையான்னு தெரியலையா, அதை தெரிஞ்சுக்க <
News January 7, 2026
வேலூர்: மனைவி கைது – கணவனுக்கு வலை!

காட்பாடி போலீசார் வடுகங்குட்டை பகுதியில் உள்ள பெட்டிக்கடைகளில் நேற்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு பெட்டிக்கடையில் ஹான்ஸ், கூலிப் பான்மசாலா உள்ளிட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்வது தெரிய வந்தது. தொடர்ந்து, ரூ.12,000 மதிப்பிலான 2.6 கிலோ போதை பொருட்களை பறிமுதல் செய்ததுடன், விற்பனையாளர் சுமத்ராவை (44) போலீசார் கைது செய்தனர். மேலும், அவரது கணவர் கார்த்திகேயனை தேடி வருகின்றனர்.
News January 7, 2026
வேலூர்: அக்கா வீட்டிற்கு வந்த தம்பிக்கு நேர்ந்த சோகம்!

வேலூர்: ஆந்திராவைச் சேர்ந்த சீனிவாசலு (38), வேலூர் முள்ளிப்பாளையத்தில் உள்ள தனது அக்கா தமிழ் செல்வி வீட்டிற்கு வந்துள்ளார். இந்நிலையில் நேற்று அவர் அங்குள்ள கிணற்றில் குளிக்கச்சென்றுள்ளார். அப்போது, நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். அதைத்தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் அவரது உடலை மீட்டனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.


