News May 7, 2024

வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும்

image

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தி.மலை மாவட்ட சிறப்புப் பேரவைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. தி.மலை மாவட்டத்தின் அனைத்து வட்டங்களிலும் கடும் வறட்சி ஏற்பட்டு பயிா்கள் பாதிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் குடிநீா்த் தட்டுப்பாடும், கால்நடைகளுக்கு தீவனப் பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது .எனவே, திருவண்ணாமலை மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Similar News

News January 24, 2026

தி.மலை: ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு பெறுவது எப்படி?

image

தி.மலை மக்களே, மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம். 1) விண்ணப்பிக்க அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகலாம். 2) அல்லது <>pmjay.gov.in<<>> இணையதளத்தில் ரேஷன் & ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம். 3) விண்ணப்பித்த 10 – 15 நாட்களில் அதிகாரிகள் சரிபார்ப்பிற்குப் பின் ‘கோல்டன் கார்டு’ வழங்கப்படும். அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

News January 24, 2026

தி.மலையில் தொடர்ந்து மழை வெளுக்கும்

image

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் கிழக்கு திசை வளிமண்டல அலை நிலவுவதால் திருவண்ணாமலை மாவட்டத்தில் இரண்டு நாட்களுக்கு மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், தி.மலைக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இன்று கனமழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது. எனவே வெளியே செல்லும் மக்கள் முன்னெச்சரிக்கையாக இருங்கள். ஷேர் பண்ணுங்க.

News January 24, 2026

தி.மலை: உங்கள் வீட்டில் சிலிண்டர் உள்ளதா?

image

கேஸ் சிலிண்டருக்கு மானியம் வருகிறதா? என்பதை SMS அனுப்பி தெரிந்து கொள்ளலாம். இண்டேன் சிலிண்டர் பயன்படுத்துவோர் ‘REFILL’ என டைப் செய்து 77189 55555 என்ற எண்ணுக்கு அனுப்ப வேண்டும். பாரத் சிலிண்டர் பயன்படுத்துவோர் 18002 24344 என்ற எண்ணுக்கும், எச்.பி. சிலிண்டர் பயன்படுத்துவோர் 1906 என்ற எண்ணுக்கும் அனுப்பி தெரிந்து கொள்ளலாம். மேலும், UMANG என்ற App மூலமும் தெரிந்து கொள்ளலாம். ஷேர் செய்யுங்கள்

error: Content is protected !!