News December 18, 2025
வரைவு வாக்காளர் பட்டியல்: ECI அறிவுறுத்தல்

டிச.19-ல் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியாகவுள்ளது. இதன் பின்னர் வாக்காளர்கள் தங்களது விவரங்களை மாவட்ட தேர்தல் அதிகாரிகளின் இணையதளம் (DEO) மூலம் அறிந்துகொள்ளலாம். இறந்தவர்கள், முகவரியில் இல்லாதவர்கள், இடம் பெயர்ந்தவர்கள், இரட்டை பதிவு செய்த வாக்காளர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ள வாக்காளர்களின் விவரங்களையும் அதே இணையதளத்தில் சரிபார்க்கலாம் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளார்.
Similar News
News December 21, 2025
ஹிஜாப் சர்ச்சை: பிஹார் பெண்ணுக்கு JH அரசு உதவி

பிஹார் CM நிதிஷ் பெண்ணின் <<18575369>>ஹிஜாப்பை<<>> அகற்றிய சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது. இந்நிலையில் அப்பெண்ணுக்கு பணி வழங்க ஜார்க்கண்ட்(JH) அரசு முன்வந்துள்ளது. அந்தப் பெண் மருத்துவர் விரும்பினால் மாதம் ₹3 லட்சம் ஊதியம், அரசு குடியிருப்புடன் வேலை வழங்க தயார் என அம்மாநில அமைச்சர் இர்ஃபான் அன்சாரி கூறியுள்ளார். அத்துடன், பெண்கள் ஹிஜாப் அணிவதை நிதிஷ்குமார் இழிவுபடுத்துகிறார் எனவும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
News December 21, 2025
H-1B விசா: தவிப்பில் இந்திய ஐடி ஊழியர்கள்!

H-1B விசா நேர்காணல்கள் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது, இந்திய ஐடி ஊழியர்களுக்கு பேரிடியாக மாறியுள்ளது. SM ஆய்வு, பின்னணி குறித்த விசாரணையில் உள்ள தீவிர கட்டுப்பாடுகளால், இந்த டிசம்பரில் நடைபெற இருந்த ஆயிரக்கணக்கான விசா நேர்காணல்கள் 2026-ம் ஆண்டு வரை தள்ளி வைக்கப்பட்டுள்ளன. இதனால் விசா புதுப்பிப்பு நேர்காணலுக்காக இந்தியா வந்திருந்த ஊழியர்கள், மீண்டும் அமெரிக்கா திரும்ப முடியாமல் சிக்கியுள்ளனர்.
News December 21, 2025
விலை ₹16,000 உயர்ந்தது.. மிகப்பெரிய மாற்றம்

உலக சந்தையில் வெள்ளி விலை ஜெட் வேகத்தில் உயர்ந்து வருவதால் இந்திய சந்தையில் 2025 இறுதிக்குள் கிலோ ₹2.50 லட்சத்தை எட்டும் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். அதனை உறுதிப்படுத்தும் வகையில் இந்த வாரத்தில் மட்டும் பார் வெள்ளி கிலோவுக்கு ₹16,000 உயர்ந்துள்ளது. இது கடந்த 14-ம் தேதி ₹2.10 லட்சமாக இருந்தது. இன்று(டிச.21) 1 கிலோ வெள்ளி ₹2,26,000-க்கும், சில்லறை விலையில் 1 கிராம் ₹226-க்கும் விற்பனையாகிறது.


