News February 14, 2025
வருவாய் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர் கூட்டம்

விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி, அருப்புக்கோட்டை மற்றும் சாத்தூர் ஆகிய வருவாய் கோட்டங்களில் 18.02.2025 அன்று முற்பகல் 11.00 மணி அளவில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது. சார் ஆட்சியர் சிவகாசி, அருப்புக்கோட்டை மற்றும் சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர்கள் தலைமையில் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் இக்கூட்டத்தில் விவசாயிகள் கலந்து கொண்டு கோரிக்கை மனு அளிக்கலாம்.
Similar News
News October 29, 2025
விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு முகாம்

விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் 31.10.2025 அன்று காலை 10 மணி முதல் மதியம் 3 மணி வரை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும். இதில் 20க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்கின்றன. 8ம் வகுப்பு முதல் பொறியியல் வரை தகுதியுள்ளோர் தளத்தில் பதிவு செய்ய <
News October 29, 2025
சிவகாசி: பட்டாசு வெடித்த பெண் பலி

ஏழாயிரம்பண்ணை அருகே இ.ராமநாதபுரம் கிராமத்தை சேர்ந்தவர் கோபால்சாமி மனைவி சோலையம்மாள்(34). இவர் தீபாவளி அன்று குழந்தைகளுடன் பட்டாசு வெடித்து கொண்டாடிக் கொண்டிருந்த போது அவர் மீது பட்டாசு விழுந்து சேலையில் தீ பிடித்ததில் காயமடைந்து சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி சோலையம்மாள் உயிரிழந்த நிலையில் ஏழாயிரம் பண்ணை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News October 29, 2025
ஸ்ரீவி: மனைவி மற்றும் கள்ளக்காதலனுக்கு ஆயுள்

கூமாப்பட்டி கிழவன்கோவிலை சேர்ந்தவர் செல்வகணேஷ். இவரது மனைவி சுமதிக்கும், பேருந்து ஓட்டுனர் ராமச்சந்திரனுக்கும் தவறான பழக்கம் ஏற்பட்டது. இதனை செல்வகணேஷ் கண்டித்துள்ளார். சுமதி, ராமச்சந்திரன், நண்பர் வேல்முருகன் ஆகியோர் சேர்ந்து செல்வகணேசை கொலை செய்தனர். இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி சுமதி, ராமச்சந்திரன் ஆகிய இருவருக்கும் ஆயுள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.வேல்முருகன் விடுதலையானார்.


