News March 19, 2025
வருவாய்த் துறையில் க்யூ ஆர் கோட் வசதி

சென்னை வருவாய் துறையில் புதிதாக வரி செலுத்துபவர்களுக்கு QR code வசதி ஏற்படுத்தப்படும். சொத்துவரி மதிப்பீடு, பெயர் மாற்றம், திருத்தத்திற்கான இறுதி அறிவிப்புகள், புதிய மற்றும் புதுப்பிக்கும் தொழில் உரிமை, மக்கள் வழங்கும் அறிவிப்புகளுக்கு புதிதாக QR Code வசதி செய்யப்படும். இதனால் எவ்வித சிரமம் இன்று உடனடியாக வரிகளை செலுத்த இயலும்.
Similar News
News April 21, 2025
சென்னையில் ரவுடி வெட்டிக்கொலை

வியாசர்பாடி பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடி ராஜி என்கிற தொண்டைராஜ் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். ஈஸ்டர் பண்டிகை கொண்டாடுவதற்காக தனது குடும்பத்துடன் மாமியார் வீட்டுக்குச் சென்றபோது, 4 பேர் கொண்ட மர்ம கும்பல் அவரை சுற்றிவளைத்து சரமாரியாக வெட்டி கொலை செய்தது. ராஜன் கடந்த மாதம் சிறையில் இருந்து வந்தவர் என்றும், முன்விரோதம் காரணமாகவே தாக்குதல் நடந்திருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர்.
News April 20, 2025
சென்னை இரவு ரோந்துப் பணி போலீசாரின் விவரம்

சென்னை போலீசாரின் “Knights on Night Rounds” (20.04.2025) இன்று இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை செயல்படுகிறது. ஒவ்வொரு பகுதியிலும் அதிகாரிகள் வாகனத்தில் ரோந்துப் பணியில் ஈபடுவர். அவசர காலங்களில் தொடர்பு கொள்ள நேரடி மொபைல் எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அசம்பாவிதம் நிகழ்ந்தால் மேலே உள்ள எண்களை அழைக்கலாம். *இரவில் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு கட்டாயம் உதவும், பகிரவும்*
News April 20, 2025
ஏ.சி., ரயில் பொது மக்களிடம் கருத்து கேட்பு

சென்னை கடற்கரை – செங்கல்பட்டு இடையே முதல் குளிர்சாதன மின்சார சேவை நேற்று முதல் பயணிகள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. நாளொன்றுக்கு மொத்தமாக 6 சேவைகளாக இயக்கப்பட்டு வரும் இந்த ரயில், தற்போது எந்தெந்த நேரங்களில் இந்த ரயிலை இயக்கலாம் என்று பொதுமக்களிடம் கருத்து கேட்கும் முயற்சியில் தெற்கு ரயில்வே ஈடுபட்டுள்ளது. அதற்காக வாட்ஸ் அப் எண்ணையும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது (6374713251) ஷேர் பண்ணுங்க