News November 17, 2025

வருவாய்த்துறையினரின் டிமாண்ட் என்ன?

image

நாளை <<18309481>>ஸ்ட்ரைக்கில்<<>> ஈடுபடவுள்ள வருவாய் துறையினர் பின்வரும் கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்: *SIR பணியால் அனைத்து நிலை அலுவலர்களுக்கும் நெருக்கடி, மனஉளைச்சல் ஏற்படுகிறது. இதற்கு நடவடிக்கை தேவை *மீட்டிங் என்ற பெயரில் துன்புறுத்தக்கூடாது *SIR பணிக்கு உரிய கால அவகாசம் வேண்டும் *BLO, BLA-க்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும் *பணிப்பளுவை கருத்தில் கொண்டு ஒரு மாத கால ஊதியத்தை மதிப்பூதியமாக வழங்க வேண்டும்.

Similar News

News November 17, 2025

தெலங்கானா சபாநாயகருக்கு சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம்

image

தெலங்கானா சபாநாயகர் பிரசாத் குமாருக்கு SC கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. 2023 தேர்தலில், காங்கிரஸ் வென்று ஆட்சியமைத்த போது, BRS கட்சியின் 10 MLA-க்கள் அக்கட்சிக்கு தாவினர். அவர்களை தகுதியிழப்பு செய்யக் கோரும் BRS-ன் மனு மீது, SC ஆணையிட்டும் சபாநாயகர் செயல்படவில்லை. இதையடுத்து, ஒரு வாரத்தில் முடிவெடுக்காவிட்டால், புத்தாண்டில் எங்கு இருப்பது என்பது உங்கள் கையில் என சபாநாயகரை SC எச்சரித்துள்ளது.

News November 17, 2025

பூதாகரமாகும் லாலுவின் குடும்ப பிரச்னை

image

தேஜஸ்வி யாதவ் செருப்பால் அடிக்கவந்ததாக லாலுவின் மகள் ரோஹினி கூறிய சர்ச்சையே இன்னும் ஓயவில்லை. அதற்குள், மேலும் 3 மகள்கள் ராஜலஷ்மி, ராகினி, சண்டா ஆகியோரும் குடும்பத்துடன் வீட்டை விட்டு வெளியேறி உள்ளனர். குடும்பத்தில் நடக்கும் தகராறு காரணமாக அவர்கள் டெல்லிக்கு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இவர்களது குடும்ப பிரச்னை கட்சியை பாதிக்குமோ என தொண்டர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.

News November 17, 2025

அலர்ட்: புயல் வரப்போகும் தேதி இதுதான்

image

நவ.22-ல் வங்கக்கடலில் மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகவுள்ளதாக IMD தெரிவித்துள்ளது. அதற்கடுத்த 48 மணி நேரத்தில் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேலும் வலுவடைந்து, நவ.25-ல் புயலாக மாற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதனால் கடலோர & டெல்டா மாவட்டங்களில் நவ.21, 22 ஆகிய நாள்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்றும் IMD கணித்துள்ளது.

error: Content is protected !!