News January 23, 2026
வருமான வரி வழக்கு.. விஜய்க்கு அடுத்த சிக்கல்

ஜனநாயகன் பட ரிலீஸ், சிபிஐ விசாரணை என அடுத்தடுத்து நெருக்கடியை சந்திக்கும் விஜய்க்கு வருமான வரித்துறை வழக்கு மேலும் ஒரு சோதனையாய் அமைந்துள்ளது. புலி பட வருமானத்தை மறைத்ததாக, வருமான வரித்துறை அவருக்கு ₹1.5 கோடி அபராதம் விதித்தது. இதை எதிர்த்த விஜய்யின் வழக்கு ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அபராதம் விதித்தது சரியே என வருமான வரித்துறை வாதிட்ட நிலையில், வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
Similar News
News February 19, 2026
அமைதியும் செழிப்பும் நிலவட்டும்: PM ரம்ஜான் வாழ்த்து

ரமலான் மாதத்துக்கான பிறை தெரிந்ததால் இன்று முதல் ரம்ஜான் நோன்பு தொடங்குகிறது. இந்நிலையில் இஸ்லாமிய மக்களுக்கு PM மோடி தனது ரம்ஜான் வாழ்த்துகளை கூறியுள்ளார். இந்த புனிதமான மாதம் நமது சமூகத்தில் ஒற்றுமையின் உணர்வை மேலும் அதிகரிக்கட்டும் என்றும், எங்கும் அமைதியும் செழிப்பும் நிலவட்டும் எனவும் மோடி X தளத்தில் வாழ்த்தியுள்ளார்.
News February 19, 2026
திமுக கிழிச்சிட்டாங்க.. அன்புமணி காட்டம்

அடுத்த ஆண்டுக்கான பட்ஜெட் பணத்தை நடப்பாண்டிலேயே திமுக அரசு பயன்படுத்துவதாக அன்புமணி சாடியுள்ளார். கொள்ளையடிக்கும் நோக்கிலேயே கடந்த 12 நாள்களில் ₹16,000 கோடிக்கு, 4,000-க்கும் அதிகமான ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும், நடப்பு பட்ஜெட்டில் என்ன கிழித்துவிட்டார்கள் என காட்டமாக விமர்சித்த அவர், அடுத்த ஆண்டு திமுக ஆட்சியில் இருக்காது எனவும் குறிப்பிட்டார்.
News February 19, 2026
திமுக பொதுச்செயலாளர் யார்? கனிமொழியா? டி.ஆர்.பாலுவா?

வயது மூப்பு காரணமாக அமைச்சர் துரைமுருகனுக்கு உடல்நலக் குறைப்பாடு ஏற்பட்டதால் தொடர் மருத்துவ கண்காணிப்பில் இருந்து வருகிறார். இதனால் அவரின் பொதுச் செயலாளர் பதவியை கூடுதல் பொறுப்பாக டி.ஆர். பாலு அல்லது கனிமொழிக்கு வழங்க திமுக தலைமை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என தெரிகிறது.


