News April 16, 2024
வருமான வரித்துறையினர் சோதனை: கல்குவாரி சங்க தலைவர் பேட்டி

திருநெல்வேலி மாவட்ட கல்குவாரி சங்கத் தலைவர் ரிச்சர்ட் வீட்டில் வருமான வரித்துறையினர் இன்று (ஏப்.16) சோதனை நடத்தினர். இந்த சோதனையை தொடர்ந்து கல்குவாரி சங்க தலைவர் ரிச்சர்ட் செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது அவர் கூறுகையில் எனது வீட்டில் பணம் மற்றும் சான்றிதழ்கள் எதுவும் கைப்பற்றவில்லை என தெரிவித்துள்ளார்.
Similar News
News November 10, 2025
நெல்லை: கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை

களக்காடு சிங்கிகுளம் இந்திரா நகரை சேர்ந்த காயத்ரி இந்த மாணவி தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவருக்கும் இவரது தம்பிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் மனமுடைந்த காயத்ரி கடந்த 5ம் தேதி விஷம் குடித்து மயங்கி விழுந்தார். உறவினர்கள் மீட்டு பாளை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். தீவிர சிகிச்சை அளிக்கபட்டும் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.
News November 10, 2025
நெல்லையில் ஒருவர் விஷம் குடித்து தற்கொலை

திசையன்விளை அருகே நந்தன்குளம் பகுதியில் ஜெயபாண்டி என்பவருக்கு சொந்தமான கோழிப் பண்ணையில் ஆதிச்சநல்லூர் பகுதியை சேர்ந்த வெங்கடாசலம் என்பவர் அவரது மனைவி பூரணி மகன் மகளுடன் தங்கி வேலை பார்த்து வந்தார். கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்தது. நேற்று முன்தினம் இரவு விரக்தியடைந்த வெங்கடாசலம் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
News November 10, 2025
நெல்லை: ஒரே நாளில் 4 பேர் மீது குண்டாஸ்

ராமையன்பட்டியை சேர்ந்த சுரேஷ், நந்தகுமார், கதிரவன், சுடலை மணி, ஆகியோர் குற்றச்செயல்களில் ஈடுபட்டதாக மானூர் போலீசார் கைது செய்தனர். இவர்கள் சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தனர். நெல்லை எஸ்பி சிலம்பரசன் பரிந்துரையின் பேரில் கலெக்டர் சுகுமார் உத்தரவின் பேரில் சுரேஷ் நந்தகுமார் கதிரவன் சுடலைமணியை குண்டர் சட்டத்தில் போலீசார் நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.


