News December 8, 2025

வருமான சான்றிதழ் வீட்டில் இருந்தே ஈசியா வாங்கலாம்!

image

அரசு திட்டங்களுக்கு விண்ணப்பிக்க, மாணவர்கள் உதவித் தொகை பெற, மானியங்கள், கடன் பெற வருமான சான்றிதழ் அவசியம். அதை <>Tnega <<>>என்ற அரசின் இணையதள பக்கத்தில் ஈசியாக வாங்கலாம். Login செய்து, ‘வருமானம் சான்றிதழ் விண்ணப்பம் பிரிவுக்கு’ செல்லவும் கேட்கும் ஆவணங்களை பதிவேற்றம் செய்யவும். அதற்கான கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்தினால், 4 நாள்களில் சான்றிதழை டவுன்லோட் செய்து கொள்ளலாம்.

Similar News

News December 11, 2025

தமிழகம் வருகிறார் ஜனாதிபதி

image

ஜனாதிபதி முர்மு வரும் 17-ம் தேதி வேலூர், ஸ்ரீபுரம் நாராயணி பொற்கோயிலுக்கு வருகை தர உள்ளார். அவருடன் கவர்னர் ரவி, மத்திய இணை அமைச்சர் எல்.முருகனும் வருகின்றனர். ஸ்ரீநாராயணி அம்மன், 1,800 கிலோ வெள்ளியால் அமைக்கப்பட்ட விநாயகர், சொர்ணலட்சுமி, பெருமாள் கோயில்களில் சாமி தரிசனம் செய்கிறார். பின்னர், கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்ட தியான மண்டபத்தை திறந்து வைத்து மரங்களை நடுகிறார்.

News December 11, 2025

விஜய் உடன் கூட்டணியா? முடிவை அறிவித்தார்

image

பாஜகவுடன் கூட்டணியில் உள்ள என்.ஆர்.காங்கிரஸை விஜய் விமர்சித்து பேசாத நிலையில், தவெகவுடன் கூட்டணி அமைய வாய்ப்புள்ளதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். இந்நிலையில், 2026 தேர்தலில் பாஜகவுடன் மீண்டும் கூட்டணி அமைக்க வாய்ப்புள்ளதா என்று புதுச்சேரி <<18524978>>CM<<>> ரங்கசாமியிடம் கேட்கப்பட்டது. அதற்கு, ‘நன்றி வணக்கம்’ என கூறிச் சென்றார். இது தவெக உடனான கூட்டணிக்கான சமிக்ஞையே என கூறப்படுகிறது. உங்கள் கருத்து என்ன?

News December 11, 2025

தலைகீழாய் காட்சி தரும் சிவபெருமான்!

image

ஆந்திரா, பீமாவரத்தில் யனமதுரு ஸ்ரீ பார்வதி அம்பிகா சமேத சக்தீஸ்வரர் ஆலயத்தில் சிவன் தலைகீழாய் காட்சி தருகிறார். சம்பாசுரன் என்ற அரக்கன் யமபுரியை கைப்பற்ற, யமன் சிவனை நோக்கி தவம் புரிந்தார். அப்போது சிவன், தற்போது கோயிலுள்ள இடத்தில் சிரசாசனத்தில் தியான நிலையில் இருந்தார். எனவே, பார்வதியின் அருளுடன் அசுரனை கொன்ற யமன், பின் இங்கு வந்து இறைவனை வழிபட்டாராம். இக்கோயில் யமபயத்தை போக்கும் எனப்படுகிறது.

error: Content is protected !!