News February 10, 2025

வரி வசூலில் கெடுபிடி கூடாது: அமைச்சர்

image

திண்டுக்கல், கோவிந்தாபுரத்தில் உள்ள இல்லத்தில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமியை நேரில் சந்திக்க வந்த திண்டுக்கல் மாநகராட்சி அதிகாரியிடம் மாநகராட்சி பகுதியில் வரி வசூல் செய்யும் போது கெடுபிடி கூடாது. இது தவிர வரி வசூலின் போது பொதுமக்களிடம் மாநகராட்சி பணியாளர்கள் ஜப்தி, குடிநீர்குழாய் துண்டிப்பு போன்ற பணிகளை செய்து அத்திமீறக்கூடாது என்று அறிவுரை வழங்கினார்.

Similar News

News March 3, 2026

திண்டுக்கல் கலெக்டர் அதிரடி ஆய்வு!

image

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. திண்டுக்கல் மற்றும் பழநி கல்வி மாவட்டங்களில் 216 பள்ளிகளைச் சேர்ந்த 21,391 மாணவர்கள் தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நேற்று நடந்த தமிழ் பாடத் தேர்வை 21,052 மாணவர்கள் எழுதினர்; 339 பேர் வரவில்லை. தேர்வு மையங்களில் செய்யப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் குறித்து கலெக்டர் சரவணன் மற்றும் முதன்மை கல்வி அலுவலர் உஷா ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.

News March 3, 2026

வீடு புகுந்து நகை பறிப்பில் ஈடுபட்ட 3 பேர் பேர் கைது!

image

வேடசந்தூர் அருகே சண்முகம் என்பவரைத் தாக்கி, 5 பவுன் நகையைப் பறித்துச் சென்ற வழக்கில் மேல்மாத்தினிபட்டியை சேர்ந்த கதிர் மற்றும் 17 வயது சிறுவர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர். போலீசார் அவர்களிடம் இருந்து திருடப்பட்ட தங்க நகைகள், செல்போன்கள் மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர். குற்றவாளிகள் மூவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு உரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

News March 2, 2026

திண்டுக்கல்: சொந்த தொழில் தொடங்க SUPER வழி!

image

திண்டுக்கல் மக்களே சொந்தமாக ஒரு கடை வைக்கவோ, தொழில் தொடங்கவோ கையில் பணம் இல்லையே என்று கவலைப்படுபவர்களுக்கு ஒரு சூப்பர் திட்டம் உள்ளது. UYEGP திட்டத்தின் கீழ் ரூ.15 லட்சம் வரை கடனும், 25% மானியமும் வழங்கப்படுகிறது. 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றாலே போதும். தகுதியுள்ளோர் <>www.msmeonline.tn.gov.in<<>> என்ற இணையதளம் மூலம் விண்ணப்பித்து பயன்பெறலாம். இந்த சூப்பரான தகவலை எல்லோரும் தெரிந்துகொள்ள SHARE பண்ணுங்க.

error: Content is protected !!